ரயில் பயணத்தின் போது திருட்டு நடந்தால் ரயில்வே தான் பொறுப்பு!

ரயில் பயணத்தின் போது  திருட்டு நடந்தால் ரயில்வே தான் பொறுப்பு!

நம் இந்தியன் ரயில்களில் பயணம் செய்யும் போது கையோடு கொண்டு செல்லப்படும் பெட்டிகளையும் சூட்கேஸைகளையும் இரும்புச் சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்தாலும் அது திருடு போய் விடுகிறது. ரயிலில் மட்டும் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் சில கொள்ளையர்கள். இதையெல்லாம் உண்மை என நிரூபிக்கும் வகையில் உள்ளது தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள். அத்துடன் இப்படி திருடு போகும் பொருட்கள் குறித்து போலீஸில் புகார் கொடுத்தாலும் அதை அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். இந்நிலையில் ரயில்களில் முன்பதிவு பெட்டியில் திருட்டு நடந்தால்  அதற்கு ரயில்வே தான் பொறுப்பு என்று தேசிய நுகர்வோர் ஆணையம்தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் இருந்து கங்காநகர் சென்ற ரயிலில், ஏ.சி. பெட்டியில்  பயணம் செய்த ஜாஸ்மின் மான் என்ற பெண்பயணியிடம்  நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பெட்டியில் இருந்த ரயில்வே ஊழியரிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவே இல்லை.  இது பற்றி நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். களவு போன நகை, பணத்துடன் ரூ.40ஆயிரம் இழப்பீடு அளிக்கவேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்தது. ஏ.சி. பெட்டியின் கதவு திறந்து கிடந்தது. ரயில்வேயின்  சேவை குறைபாடு காரணமாகவே,திறந்து கிடந்த கதவு மூலமாக திருடன் புகுந்து கொள்ளைஅடித்துள்ளான். இது ரயில்வேயின் தவறு தான் என்று தீர்ப்பில்கூறி யிருந்தது.

இதை எதிர்த்து முறையிட்டபோது ராஜஸ்தான் மாநில நுகர்வோர்கோர்ட் ரயில்வே அப்பீலை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்துதேசிய நுகர்வோர் ஆணையத்தில் அப்பீல் செய்தனர்.  பயணிகளின் உடைமைகளை அவர்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ரயில்வே பொறுப்பு ஏற்க முடியாது என்ற ரயில்வேயின் வாதத்தை ஆணையம் தள்ளுபடி செய்தது.  ரயில்களில் பயணிக்கும் முன்பதிவு பயணிகளின் உடைமைகளுக்கும் ரயில்வே தான் பொறுப்பு. முன்பதிவு பெட்டியில் சம்பந்தமே இல்லாதவர்கள் எப்படி நுழையலாம்.. அதை தடுக்காதது ரயில்வேயின் குறைபாடு..

ஆக ஓடும் ரயில்களில் எது நேர்ந்தாலும் சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டலம் தான்  இழப்பீடு அளிக்கவேண்டும்.  பயணிகளின் பாதுகாப்பான, வசதியான பயணத்துக்கு ரயில்வே தான் பொறுப்பு. அதில் இருந்து ரயில்வே தப்பித்துக்கொள்ள முடியாது எனவே  இழந்த பொருட்களின் மதிப்பீடு தொகையுடன் வட்டி சேர்த்து  ரூ.2.7 லட்சம் அளிக்கவேண்டும் என்ற ரயில்வே அளிக்கவேண்டும் என்று தேசிய நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்தது.

Related Posts