செய்தியைக் கேட்க / Listen to News
பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் பெரும்பாலான உறுப்பினர்கள், அங்குள்ள கேண்டீனில் மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். அதன்படி பாராளுமன்ற கட்டிடத்தின் முதல் மாடியில் அறை எண் 70–ல் அமைந்துள்ள கேண்டீனில் நேற்று மதியமும் சாப்பிடுவதற்காக ஏராளமான உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

அப்போது திடீரென அங்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, கேண்டீனில் தானே காசு கொடுத்து சைவ சாப்பாட்டை வாங்கினார். பின்னர் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த உறுப்பினர்களுடன் அமர்ந்துகொண்டு அரட்டையடித்தவாறே அவர் சாப்பிட்டார்.
பாராளுமன்ற கேண்டீனுக்கு பிரதமரின் இந்த திடீர் வருகை, அங்கிருந்த உறுப்பினர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. பாராளுமன்ற கேண்டீனில் சாப்பிட்டதன் மூலம் பிரதமரும் ஒரு உறுப்பினர்தான் என்பதை மோடி நிரூபித்திருப்பதாக அவர்கள் கூறினர்.
இந்நிலையில் இந்திய எம்.பி.க்கள் சாப்பிடும் பாராளுமன்ற கேண்டீன் விலை விபரம் தெரிந்து கொள்வது அவசியம்!
¤ டீ ரூ1.00
¤ சூப் ரூ5.50
¤ சப்பாத்தி ரூ.1.00
¤ சாதம் ரூ.2.00
¤ தோசை ரூ.4.00
¤ பிரியாணி ரூ.8.00
¤ சிக்கன் பிரியாணி ரூ.34.00
¤ வெஜ் தாளி ரூ.12.50
¤ நான்வெஜ் தாளி ரூ.22.00
¤ தயிர் சாதம் ரூ.11.00
¤ மீன் சாப்பாடு ரூ.13.00
¤ மீன் வறுவல் ரூ. 17.00
¤ சிக்கன் கறி ரூ.20.50
¤ சிக்கன் மசாலா ரூ.24.50
¤ பட்டர் சிக்கன் ரூ.37.00
