பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம் அல்ல.. அல்ல. அல்ல!- மத்திய அரசு தகவல்!
அண்மையில் சமூக நீதி துறை ராஜாங்க அமைச்சர் விஜய் சம்ப்லா மாநிலங்களவையில் அளித்துள்ள எழுத்து பூர்வ பதிலில், ”நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். அவர்களில் 2.2 லட்சம் ஆண்கள் மற்றும் 1.91 லட்சம் பெண்கள் உள்ளனர் அவற்றில் மேற்கு வங்காள மாநிலம் 81 ஆயிரத்து 244 பேரு டன் முதலிடத்தில் உள்ளது” என்று தெரிவித்த்திருந்தார்.மேலும் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில், “இந்த நாலு லசம் பெக்கர்களில் 21 சதவீதம் பேர் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு பாசாகியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் 12-ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு பிச்சைக்காரர்களாக மாறி பணம் சம்பாதிக்கின் றனர். அது மட்டுமல்ல, இவர்களில் 3 ஆயிரம் பேர் டிப்ளமோ அல்லது ஏதாவது டிகிரி, போஸ்ட் கிராஜுவேட் பட்டம் பெற்றவர்கள் என்றும் அந்த ஆய்வு கண்டறிந்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் `வறுமையில் உள்ளவர்கள் பாதுகாப்புச் சட்ட’த்தில் பிச்சை எடுப்பது குற்றம் என்பது நீக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தடை செய்ய முடிவாகி யிருக்கிறது.மத்திய அரசு `வறுமை நிலையில் உள்ளவர்கள் (பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) சட்டம், 2015′ என்ற புதிய சட்டத்துக்கான வரைவுகளை வெளியிட்டுள்ளது.இதில் வறுமை நிலையில் இருப்பவர்கள் என்பதின் கீழ் வறுமை யில் உள்ளவர்கள், கைவிடப்பட்டவர்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், தங்க இடம் இல்லாத வர்கள், யாசகர்கள், உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த புதிய சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில அரசும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக மறுவாழ்வு மையங் களை உருவாக்க வேண்டும். அந்த மையங்களில் பயிற்றுவிக்கப்பட்டப் போதியப் பணியாளர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுதவிர தொழில் பயிற்சி அளிக் கும் நிபுணர்களும் நியமிக்கப்பட வேண்டும். ண்களுக்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்தனியே மையங் களை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் மறுவாழ்வு மையங்களை போதிய வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும்.
வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டறிவதற்காக மாவட்டந்தோறும் குழுக்களை உருவாக்க வேண்டும். வறு மை நிலையில் உள்ளவர்களுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள், உதவிகள் குறித்து அவர்களுக்கு விளக் கிக் கூற வேண்டும்.மேலும், இதற்காக அரசு ஒரு கண்காணிப்பு மற்றும் ஆலோசனை குழுவை உருவாக்கி இத் திட்டத்தை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு ஒருங்கிணைப்பு குழுவையும் ஏற்படுத்தி, வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.அத்துடன், தற்போது பிச்சை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை கைவிடவும் வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


