பாகிஸ்தானிலும் உதயமானது ஆம்ஆத்மி கட்சி!
இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி உருவானது. அக்கட்சியை ‘ஐ.ஏ.எஸ்’ அதிகாரி கெஜ்ரிவால் தொடங்கினார். அது தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது.மக்களின் அமோக ஆதரவை பெற்று டெல்லி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. அதே பாணியை பின்பற்றி தற்போது பாகிஸ்தானிலும் ஆம்ஆத்மி கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இக்கட்சிக்கு ‘பாகிஸ்தான் ஆம்ஆத்மி கட்சி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதை அட்னன் ரந்தாவா என்பவர் தொடங்கியுள்ளார். இவர் பாகிஸ்தானில் உள்ள தெற்கு பஞ்சாப்பில் உள்ள பியூரேவாலா என்ற இடத்தை சேர்ந்தவர்.
இவரும் கெஜ்ரிவாலை போன்று உயர் பதவி வகித்தவர்.இவர் பாகிஸ்தான் வெளியுறவு துறையில் அதிகாரியாக பணிபுரிந்தார். பின்னர் அவரை பாகிஸ்தான் அரசு ‘ஐ.ஏ.எஸ்’ உளவு துறையில் ஏஜண்டாக நியமித்தது. அதை ஏற்காத அவர் வெளியுறவு துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆம்ஆத்மி கட்சியை தொடங்கினார்.கெஜ்ரிவால் தனது ஆம்ஆத்மி கட்சியின் அடையாளமாக நேரு தொப்பியையும், சின்னமாக துடைப்பத்தையும் வைத்துள்ளார். அது போன்று ரந்தாவாவும் தனது கட்சிக்கு புதுமையான அடையாளம் மற்றும் சின்னத்தை தேர்வு செய்ய ஆலோசித்து வருகிறார்.
பாகிஸ்தானில் ஊழல் மற்றும் வறுமையை ஒழிப்பதே ஆம்ஆத்மி கட்சியின் கொள்கையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் அரசியலில் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


