பறக்கும் கார் தயார்!-வீடியோ ..

பறக்கும் கார் தயார்!-வீடியோ ..

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனம் டெரபியூஜியா. மசாசூசட்ஸ் மாநிலம் வூபர்ன் நகரை தலைமையிடமாக கொண்டது. ரேஸ் கார்கள், சிறிய ரக விமானங்கள், விமான பாகங்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இதற்கிடையில் இதே பிளானில் பறக்கும் கார் ஒன்றை ஸ்லோவாக்கியா விஞ்ஞானி ஒருவர் உருவாக்கியுள்ளார். ஏரோ மொபைல் என பெயரிடப்பட்டுள்ள இந்த காரை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
jan 3 - tec flying car
முன்னதாக தரையில் மட்டுமின்றி வானத்திலும் செல்லக்கூடிய கார் உருவாக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனம் 2006,ம் ஆண்டு ஈடுபட்டது. 2009,ல் தயாரிப்பு பணிகள் முடிந்தன. பல கட்டமாக இதன் சோதனை நடந்து வந்தது. டிரான்சிஷன் என்று இந்த காருக்கு பெயரிடப்பட்டு இதை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய அமெரிக்க தேசிய ஹைவே பாதுகாப்பு அமைப்பிடம் கடந்த ஜூலையில் அனுமதியெல்லாம் வாங்கியிருந்ததுது. இதையடுத்து, சோதனை ஓட்டம் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பிளாட்ஸ்பர்க் விமான நிலையத்தில் நடத்தப்பட்டது.

அப்போது டெரபியூஜியா நிறுவனத்தின் தலைமை சோதனை பைலட் பில் மிட்டீர் ஓட்டிச் சென்றார். முதலில், தரையில் வழக்கமான கார் போல ஓடிச் சென்றது. சிறிது நேரத்தில், கார் கதவுகள் போல இருந்த இறக்கை கள் இரு பக்கமும் விரிந்தன. மெல்ல உயரே எழும்பிய கார் 8 நிமிடத்துக்கு 1400 அடி உயரம் வரை பறந்து பத்திரமாக தரையிறங்கியது. சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக டெரபியூஜியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அன்னா டிட்ரிச் நேற்று கூறினார்.

சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஆண்டுக்குள் சந்தைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம் என்றும் தெரிவித்த அவர் அந்த கார் விலை ரூ.1.42 கோடி. ஆர்டர் கொடுக்க விரும்புபவர்கள் ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும தெரிவித்திருந்தார்

இதற்கிடையில்தான் இதே அறிவியல் கற்பனை திரைப்படங்களில் வருவது போல பறக்கும் கார் ஒன்றை ஸ்லோவாக்கியா விஞ்ஞானி ஒருவர் உருவாக்கியுள்ளார். ஏரோ மொபைல் என பெயரிடப்பட்டுள்ள இந்த காரை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பறக்கும் காரும் சாலையிலும் ஓடும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அத்துடன் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய இந்த காரில், 2 இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இறக்கைகளை விரித்து இயந்திரத்தை இயக்கினால், இக்கார் தரையிலிருந்து எழும்பி, வானத்தில் பறக்க தொடங்குகிறது. இத்தகைய கார் மூலம், தொலைதூரத்தில் இயற்கை பேரிடரில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவ முடியும் என்று அதன் வடிவமைபபாளர் தெரிவித்தார்.

அந்த காரின் வீடியோ:;http://www.youtube.com/watch?v=zxtYvbHUmBU