32°C
விளம்பரம்
Advertisement

நூடுல்சை அடுத்து பால், குடிநீர் பாக்கெட், டீத்தூள், மசாலா போன்ற உணவுப்பொருட்களும் ஆய்வு- தமிழக அரசு அதிரடி!

admin சேலம் Published: June 10, 2015 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




மேகி நூடுல்ஸ் சர்ச்சையை தொடர்ந்து பால், தண்ணீர் பாக்கெட், தண்ணீர் கேன், டீத்தூள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உரிய முறையில்ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
lab jun 10
இதுகுறித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை வட்டாரம் தெரிவித்த தகவலிது:

“மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அளவுக்கு அதிகமான ரசாயன பொருட்கள் கலந்திருப்பது போல மற்ற எந்த உணவு பொருளில் கலந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்ய உள்ளோம்.
அதாவது குடிநீர் பாக்கெட்டுகள், கேன் தண்ணீர், பாட்டில் தண்ணீர், பால்பாக்கெட், டீத்தூள், காப்பித்தூள், பல வகையான மசாலாத்தூள் பாக்கெட்டுகள், சமையல் எண்ணை பாக்கெட்டுகள், மேலும் பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

பாக்கெட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்படும். மக்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடவேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் எந்த ஒரு பொருளும் சோதனைக்கு உட்படுத்தப்படும். ஏற்கனவே உணவுப்பொருட்களை ஆய்வு நடத்தி வருகிறோம். இனிமேல் அந்த ஆய்வு தீவிரப்படுத்தப்படும்.

காய்கறி, பழங்கள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். உதாரணமாக பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயன பொருட்கள் சேர்க்கலாம். அவை அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. சாக்லேட்டில் டால்டா அதிகமாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனவே சாக்லேட்டுகளும் ஆய்வுசெய்யப்படும்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்