32°C
விளம்பரம்
Advertisement

நிஜ சம்பவத்தை காட்டப் போகும் ‘ நெடுஞ்சாலை’ ஆல்பம்!

admin சேலம் Published: March 17, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வழங்க பைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன்,ஆஜூ ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “நெடுஞ்சாலை”ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.கதாநாயகியாக ஷிவதா நடித்திருக்கிறார்.மற்றும் கண்ணன் பொன்னையா,தம்பி ராமய்யா,பிரசாந்த்நாராயண், சலீம்குமார்,ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
கதை, திரைக்கதை, இயக்கம் -கிருஷ்ணா .படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணாவிடம் கேட்டபோது,”நெடுஞ்சாலையில் நடந்த உண்மை நிகழ்வை திரைக்கேற்ற மாதிரி உருவாக்கி இருக்கிறோம். 1980 ம் ஆண்டுவாக்கில் படம் நம்மை இழுத்து செல்லும். பல வருடங்களுக்கு முன் நடந்த நிஜ சம்பவம் இது.இதில் காதலை கலந்து கொடுத்திருக்கிறோம். பாடல்களும் படமாக்கப் பட்ட விதமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெரும். படத்தை பார்த்த திரு.உதயநிதிஸ்டாலின் உடனே படத்தை வெளியிட வாங்கியது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இம்மாதம் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது நெடுஞ்சாலை.” என்றார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்