நாட் ரீச்சபிள் – விமர்சனம்!

ம்மூரில் ஐந்து ரூபாய்க்கு வாங்கும் பாக்கெட் நாவல் மற்றும் கிரைம் டைரியில் வரும் சப்ஜெக்ட்தான் நாட் ரீச்சபிள். சைக்கோ கில்லர் & கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமா உருவாகி இருக்கிறது. கூடவே பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதைக்களம், அதே சமயம் சமூகத்தில் நடக்கும் சில சம்பவங்களால் ஏற்படும் விளைவுகளையும் காட்டி இருக்கும் கதையில் விறு விறுப்பு மட்டும் மிஸ்ஸிங்.

கதை என்னவென்றால் சிட்டியில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். போலீஸ் அதிகாரி விஸ்வா கொலையாளி யார் என்று தேடுகிறார். இதற்கிடையில் சாய் தன்யா மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையும் பெறுகிறார். இச்சூழலில் வீடொன்றின் கண்ணாடியில் எழுத்தப்பட்ட சில வார்த்தைகளை க்ளுவாக எடுத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடர்கிறார். அப்போது மாணவ, மாணவிகள் சிலர் காட்டுபகுதியில் தோட்ட ஆராய்ச்சிக்காக சென்றது தெரிகிறது. அதிலிருந்து விசாரணையை முடுக்கிவிடும் விஸ்வா இறுதியில் கொலைகாரனை எப்படி அடை யாளம் காண்கிறார் என்பதும் ஏனிந்த கொலை என்பதுதான் கிளைமாக்ஸ்.

error: Content is protected !!