தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் சஸ்பெண்ட்டை சஸ்பெண்ட் செய்தது: சுப்ரீம் கோர்ட்!
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க் கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பேசும் போது, ஜெயலலிதாவை விமர்சித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பதிலுக்கு தேமுதிக உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.இதையடுத்து, தேமு திக உறுப்பினர்களை நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், இப்பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்அவர்கள் எழுத்துப்பூர்வ மாக பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம் விளக்கம் அளித்தனர்.

இதை பரிசீலித்த சபாநாயகர் தேமுதிக வைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார், அழகாபுரம் ஆர்.மோகன் ராஜ். எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், க.தினகரன் ஆகிய 6 உறுப்பினர்களும் அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கம் என்று அறிவித்தார் அத்துடன் இந்த காலகட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப் பட்டு வரும் ஊதியம் மற்றும் எந்தவித மான பிற ஆதாயங்களையும், சலுகை களையும் பெற இயலாது என்று பேரவைத் தலைவர் தனபால் கூறினார்.
இதையடுத்து ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தேமுதிக எம்எல் ஏக்கள் 6 பேரும் உரிமைக் குழுவின் பரிந்துரைப் படி, இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இடை நீக்கம் செய்ததால் எங்களால் தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தேமுதிக எம்எல் ஏக்கள் 6 பேரும் தெரிவித்தனர்.ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்து. இந்த வழக்கின் மீதான விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்களின் இடைநீக்கத்தில் வழிமுறைகள் பின்பற்றப்பட வில்லை. சட்டமன்ற உறுப்பினருடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரை இடைநீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.


