ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்’ஆல்பம்
வெயில்’ படம் மூலம் இசையைமப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், விஷால் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்தவர். சில மாதங்களுக்கு முன் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அவரது நடிப்பில் ‘பென்சில்’ என்ற படம்தான் முதன் முதலாக தொடங்கியது. ஆனால் இடையில் பல காரணங்களால் நிறுத்தப்பட்ட அந்த படம் தற்பொழுது மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் .இரண்டாவது படமான ‘டார்லிங்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்திரம்’ என்ற படத்தின் மீளுருவாக்கமாக உருவாகும் ‘டார்லிங்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இப்படத்தில் கருணாஸ், பாலா உட்பட பலர் நடிக்கின்றனர். தெலுங்கில் இந்தப் படத்தை எழுதி, இயக்கிய சாம் ஆண்டனே தமிழ் மீளுருவாக்கத்தையும் இயக்குகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்