‘சாலையோரம்’ – திரைப்பட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
முருகன் சுப்பராயனுடன், டாக்டர் செல்வ தியாகராஜன் இணைந்து ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் ‘சாலையோரம்’.
இதில் ராஜ் ஹீரோவாகவும், செரினா ஹீரோயினாகவும் அறிமுகமாகியிருக்கின்றனர். வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் நடித்திருக்கிறார். மற்றும் சிங்கம்புலி, முத்துக்காளை, ‘லொள்ளு சபா’ மனோகர், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
பி.வாசுவிடம் உதவி இயக்குநராக இருந்த க.மூர்த்தி கண்ணன் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். படம் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது, “கழிவுத்தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையையும், சமூகத்தால் அலட்சியப்படுத்தப்படும் அவர்களின் உயிர்களையும் மையமாகக்கொண்ட திரைப்படம் இது,” என்று சிம்பிளாக சொல்லி விட்டார்..
ஏப்ரல் 29 திரைக்கு வர இருக்கும் புதிய படம் சாலையோரம் , தணிக்கைக் குழுவின் பெரும் பாராட்டைப்பெற்று “U” சான்றிதழுடன் தமிழக அரசின் வரி சலுகையையும் இப்படம் பெற்றுள்ளதாம்.

















