சரமாரியாக சர்ச்சைகளைக் கிளப்பும் ‘ஓ காதல் கண்மணி’!

சரமாரியாக சர்ச்சைகளைக் கிளப்பும் ‘ஓ காதல் கண்மணி’!

கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் ’ஓ காதல் கண்மனி’.இந்தப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளர். இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் மகன் அமீன் ஒரு பாடல் பாடி உள்ளார். இந்த பாடல் அரபி பாடலாகும் இந்த பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸாக இருப்பதால் சமீபத்தில் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தனர் படக்குழுவினர். படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் சில காட்சிகள் வரம்பு மீறுவதாகவும், ஆபாசமாக இருப்பதாகவும் கூறி யு /ஏ சான்றளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்றிதழ் பெற முயன்று வருகின்றனர்.
o kanmani1
மேலும் கடல் படத்தால் அடைந்த நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தால்தால்தான் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று சில விநியோகஸ்தர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஓ காதல் கண்மணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினியும் கலந்து கொண்டு,”உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன், எங்களை விட பலம் வாய்ந்த பேனாவை நீங்க கையில வச்சிக்கிட்டிருக்கீங்க. எப்படி குவாலிஃபைட் பியூப்பிள்தான் படத்துல நடிக்க முடியுமோ, சினிமாட்டோகிராபி பண்ண முடியுமோ, ரகுமான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ, அதே மாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான், விமர்சனம் எழுதணும்.
நீங்கள்லாம் இருக்கும் போது, எல்லாரையும் எழுத விட்றாதீங்க. முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க. இப்ப கம்ப்யூட்டர் உலகத்துல, மவுசை மூவ் பண்ண தெரிஞ்சவங்கள்லாம் எழுத்தாளர் ஆகிட்டாங்க. அப்படி விட வேண்டாம், நீங்கள்லாம் இவ்வளவு குவாலிஃபைடா இருக்கும் போது, எதுக்கு மத்தவங்களை எழுத விடறீங்க. உங்களை நம்பிதான் நாங்க இருக்கோம், இந்தப் படத்தைப் பத்தி நல்லா எழுதுங்கன்னு வேண்டிக்கிறேன்,” என வெளிப்படையாகப் பேசினார்.

சுஹாசினியின் இந்தக் கருத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக சகட்டு மேனிக்கு பல கருத்துக்களைப் பதிவு செய்து திட்டி வருகிறார்கள்
o kanmani 2
ஆனால், மணிரத்னமோ அதே மீட்டிங் மேடையில்,”முன்னாடியெல்லாம் டீக்கடையில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்தார்கள். நானும், பி.சி.ஸ்ரீராமும்கூட குட்டிச் சுவரில் உட்கார்ந்து, யாருக்குமே படம் எடுக்க தெரியலை என்று விமர்சித்திருக்கிறோம். இப்போது மக்களுக்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது. அதில் அவர்கள் தங்களின் கருத்தைக் கூறுகிறார்கள். அதைத் தடுக்க முடியாது”என்று பேசினார்.

அது மட்டுமின்றி கவிஞர் வைரமுத்து,” இந்தப் படத்தில் கலாச்சார அதிர்ச்சியை தான் மணிரத்னம் பதிவு செய்துள்ளார். அதாவது திருமணம் செய்யாமல் ஆணும், பெணும் வாழ்வது போன்ற கதை. இன்றைக்கு கலாச்சாரம் அதைநோக்கி தான் செல்கிறது.இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்காலத்தில் திருமணம் என்ற ஒன்று இருக்குமா…? என்று எண்ண தோன்றும். இதுபோன்ற கலாச்சார அதிர்ச்சியை மணிரத்னம் பதிவு செய்துள்ளார்.’ என்று தெரிவித்திருந்தார்.

இப்படி பல சர்ச்சைகளுக்கு வித்திட்ட திரைப்படம் திட்டமிட்டப்படி ரிலீஸாகுமா? என்று சந்தேகமாகத்தான் இருக்கிறதாம்.

Related Posts