சந்திரனில் துளசி செடி வளர்க்க போகும் நாசா !

சந்திரனில் துளசி செடி வளர்க்க போகும் நாசா !

சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஈடுபட உள்ளது. அதற்கான ஆய்வை வருகிற 2015–ம் ஆண்டு தொடங்க உள்ளது.அதற்கான ஆயத்த பணியை இப்போதே தொடங்கிவிட்டது.
nov 30 - nasa plant.mini
முன்னதாக சந்திரனில் எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது.அதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது.இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.

தாவரங்களை வளர்ப்பதற்காக சந்திரனுக்கு வருகிற 2015–ம் ஆண்டில் ஒரு ஆய்வு கூடம் அனுப்பப்படுகிறது. அதில் 5 முதல் 10 நாட்களில் முளைத்து வளரக்கூடிய டக்னிப், அராபி, டோப்சிஸ், ஓமம், துளசி செடி வகைகளின் விதைகளும் எடுத்து செல்லப்படுகின்றன.

இந்த தாவரங்கள் செழித்து வளரும் பட்சத்தில் அங்கு மனிதனும் வாழ முடியும் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதற்கான ஆய்வும் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னோடி ஆராய்ச்சியாக தாவரங்கள் பயிரிடப்படுகிறது.

NASA Project Looks To Grow Turnips And Basil On The Moon
*************************************************************
NASA is planning to take its exploration of the moon to a new level by sowing the first seeds on the lunar surface by 2015. The space agency said it plans to develop a very simple sealed growth chamber that can support germination over a five to 10 day period in a spacecraft on the moon.

Related Posts

error: Content is protected !!