32°C
விளம்பரம்

கொஞ்சம் நிறைய கஞ்சா போட்டு முறுகலா ஒரு பீஸா பார்சல்…!

admin சேலம் Published: April 29, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




மருத்துவ பயன்கள் அதிகம் கொண்டதாக பல நாடுகளில் நம்பப்படும் பயிர் ‘கஞ்சா’. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இதன் தாயகம் மத்திய ஆசியப் பகுதியான தற்போதைய திபெத் பகுதி. சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப ஒரு அடி முதல் 5 அடி உயரம் வரை வளரக்கூடியது.கஞ்சா இலைகளும், விதைகளும் போதை தரக்கூடியவை. உலகம் முழுவதும் இதன் போதைக்கு அடிமையானவர்களில் 4 சதவீதம் பேர் முதியோர். 6 சதவீதம் பேர் தினமும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த நிலையில் கஞ்சா சில நாடுகளில் சில மாநிலங்களில் லீகல் நார்த் அமெரிக்காவில் அதனால் வான்கூவர் / கொலாரேடா பீஸா கடைகளில் இப்போ கஞ்சா பீஸா ரொம்ப ஃபேமஸ்……………….
ravi - apr 29
முன்னரே சொன்ன மாதிரி கஞ்சா மருத்துவ தன்மை உடையது என சில ஐரோப்பா நாடுகளில் கூட அதை வளர்க்க விற்க வாங்க அனுமதிக்கிறது. மேலும் இந்த கஞ்சா செடியை மூலிகையாக அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுபற்றி சமீபத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க மருந்துப்பொருட்கள் அமலாக்க ஏஜென்சி, கஞ்சாவை மூலிகை பட்டியலில் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில் இந்த பிட்ஸாவை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மற்றும் கொலாரேடா மாநிலங்களில் கூட ஹோம் டெலிவிரி ஓகெ ஒகே-வாம்.

இதற்கிடையில் சர்வதேச அளவில் போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் அவற்றின் விலை விபரம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் முதல் நாடு இந்தியாதான் என்பதும் சராசரியாக 5 ரூபாய் இருந்தால் இந்தியாவுக்குள் ஒரு கிராம் கஞ்சாவை வாங்கிவிட முடியும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளதும் நினைவுகூறத்தக்க்து.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்