32°C
விளம்பரம்

ஈழத் தமிழர்களால் பின் கதவு வழியாக தப்பியோடிய நீயா- நானா கோபிநாத்!

admin சேலம் Published: April 29, 2014 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




தென்னிந்திய தொலைக்காட்சியில் நீயா- நானா ? என்ற நிகழ்சியை நடத்தி, மக்கள் மத்தியில் செல்வாக்கை தேடிவைத்திருப்பவர் கோபிநாத். அவரது நிகழ்சியைப் பார்த்தால் ஒரு முற்போக்குவாதியக, சமூக சிந்தனையுள்ளவராக, ஒரு இனரீதியாக பற்றுக்கொண்ட மனிதராக இல்லை என்றால் சீர் திருத்த சித்தனையுள்ள மனிதர் இவர் என்று எண்ணத் தோன்றும். ஆனால் எல்லாமே TV பூச்சாண்டி தான், நிஜவாழ்கையில் இல்லையடி சகியே என்பது சரியாகத்தான் இருக்கிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விஜய் TV இன் ஆரம்ப நிகழ்வு ஒன்றுக்கு, லண்டன் வந்திருந்தார் கோபி நாத். இவர் அந் நிகழ்வின் அறிவிப்பாளாராக வந்திருந்தார். அங்கே அந்நிகழ்ழ்சியில் பேசும்போது ஈழத் தமிழர்கள் என்ற வார்த்தையைப் கடைசிவரை பயன்படுத்தவே இல்லை. தான் பேசும்போது “அண்டை நாட்டு தமிழர்கள்” “அயல் நாட்டு தமிழர்கள்” என்ற சொற்பதங்களையே பாவித்து மேடையில் பேசினார். ஈழம் என்ற சொல்லை பேசக்கூடாது என்று, மகிந்தர் தான் கூறியுள்ளார். அதனை என்ன கோபிநாத் பின்பற்றுகிறாரா என கூட்டத்தில் இருந்த தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
neeya naana gopi
இது இவ்வாறு இருக்க, ஈழத் தமிழர்கள் சிலர் அவர் இருக்கும் இடத்தை படாத பாடு பட்டு அறிந்து, அவரது விடுதியின் அறைக்கு பார்க்கச் சென்றுள்ளார்கள். அவர் அங்கே இல்லை என்றும் கோபிநாத் வெளியே சென்றுவிட்டதாகவும் , அங்கே இருந்த உதவியாளர் கூறியுள்ளார். ஆனால் திடீரென மோபைல் போனில் பேசியபடி கோபிநாத் தனது அறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனைப் பார்த்த தமிழர்கள் திகைத்துப் போனார்கள். ஒரு பெரிய மலையாள முன்னணி நடிகர் ரேஞ்சில் அவர் , தமிழர்களைப் பார்பதை தான் விரும்பவில்லை என்பதுபோல ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதே வேளை இவர்களை சந்தித்தால் விவகாரம் ஆகிவிடும் என்று கூறி அப்படியே அறைக்குள் சென்று, பின் கதவால் எங்கோ தப்பியோடியும் உள்ளார். சமூக சீர் திருத்தம், சம உரிமை, பெண்கள் முன்னேற்றம் என்று பல விடையங்களை கருப்பொருளாக எடுத்து வாதிட்டு வரும் இவர் ஈழத் தமிழர்களை பார்த்து பயந்து ஓடக் காரணம் என்ன ?

இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற நீயா நானா நிகழ்சியில், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடர்பாக ஒரு தமிழக இளைஞர் பேசியுள்ளார். ஆனால் அந்தக் காட்சிகள் அனைத்தையும் தணிக்கை செய்தே கோபிநாத் அந்த நீயா நானா நிகழ்சியை ஒளி பரப்பியுள்ளார். லண்டனில் நீயா நானா நிகழ்சியைப் பார்க்க , ஈழத் தமிழர்கள் காசு செலவு செய்து , காசு வாங்கி டீகோடரில் போட்டு பார்க்கவேண்டியுள்ளது. ஆனால் ஈழத் தமிழர்களை பார்த்தால், அது பற்றி பேசினால் கோபிநாத்துக்கு ஆகாது. இவர்கள்போல இரட்டை முகம் கொண்ட மனிதர்களையா நாம் , பார்கச் சென்றோம் ? இவர் பற்றி பேச எந்த இணையங்களோ இல்லை ஊடகங்களோ தயார் இல்லை. இவர்கள் செய்யும் பிழைகளை சுட்டிக் காட்ட எவருக்கும் துணிச்சலும் இல்லை. ஆனால் நாம் ஈழத் தமிழர்கள். எமது பணத்தில் பிழைப்பு நடத்தும் இவர்களிடம் கேள்வி கேட்க்கும் உரிமை எமக்கு உண்டு. அதனை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது அல்லவா ?

கோபிநாத் குறித்த தகவல்கள் அனைத்தையும் நாம் இங்கே உங்கள் முன்வைத்துள்ளோம். அதற்கு அவர் தகுந்த பதிலை தருவது நல்லது. ஈழம் என்ற சொல் உங்களுக்கு ஏன் அலெர்ஜியாக உள்ளது ? நீங்கள் என்ன மகிந்தரின் கையாளா ?

ஈழத் தமிழர்கள் அவர்களின் விடுதலைப் போராட்டத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இதுவரை காலமும் அதுதொடர்பாக நீங்கள் ஏன் வாய் திறக்கவே இல்லை ? உங்கள் மெளனத்தை கலைப்பீர்களா ?

உங்கள் நிகழ்வில் ஈழம் தொடர்பாக யாரவது பேசினால் அதனை ஏன் தணிக்கை செய்கிறீர்கள். தயவுசெய்து அரசியல் என்று மட்டும் சொல்லி தப்பிக்கவேண்டாம். ஏன் எனில் நீங்கள் பேசாத அரசியலே இல்லை எனலாம் !

மேல் காணும் வினாக்களுக்கு, நீங்கள் பதில் கூறவேண்டிய கடைப்பாட்டில் உள்ளீர்கள். அந்த தார்மீகப் பொறுப்பு உங்களிடம் உள்ளது. இதனை நாம் ஒரு சவாலாக விடுக்கிறோம். உங்களால் பதில் கூற முடியுமா ?

அதிர்வு By Nakkeeran Balasubramanyam

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்