குச்சி ஐஸ்.. குச்சி ஐஸ் – இது ஆவின் தயாரிச்ச குச்சி ஐஸ்!

குச்சி ஐஸ்.. குச்சி ஐஸ் – இது ஆவின் தயாரிச்ச குச்சி ஐஸ்!

தமிழகத்தில் பால், பால் பொருள்கள் விற்பனைச் சந்தையில் கடும் போட்டி நிலவி வருகிறது. பல தனியார் நிறுவ னங்கள் விற்பனை செய்யும் பால், பால் பொருள்களைவிடக் குறைந்த விலை, தரமான முறையில் கிடைக் கும் என்பதால், ஆவின் பால், பால் பொருள் களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. தற்போது சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கவும், அதிகளவிலான நுகர்வோரைக் கவரும் விதமாகவும், பல்வேறு புத்தாக்க நடவடிக்கைகளில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கால் லிட்டர் பால் பாக்கெட் விற்பனை, டிரைவ்-இன்-பார்லர், சிறிய, பெரிய குல்பி, லாங் லைஃப் குலோப் ஜாமூன் போன்ற பல புதிய முயற்சிகளை ஆவின் தொடங்கியது.அந்த வரிசையில், கோடை வெயிலில் பொதுமக்கள், குழந்தைகளைக் குளிர் விக்கும் விதமாக ஆவின் குச்சி ஐஸ் வகைகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. புதிய வகை குச்சி ஐஸ்கள் பல்வேறு சுவைகளில் தங்களது விற்பனையகங்களில் கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
aavin ice mar 20
இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் , ” ஆவின் உற்பத்தி செய்யும் பால், நெய், வெண்ணெய், இனிப்பு உள்ளிட்ட பால், பால் சார்ந்த பொருள்களுக்கு நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. நுகர்வோருக்குத் தரமான பால் உப பொருள்களை வழங்குவதற்காக, சென்னை அம்பத்தூரில் ரூ.32.40 கோடியில் புதிதாக பால் உப பொருள்கள் தயாரிக்கும் பண்ணை அமைக்கப்பட்டது.

இந்தப் பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் தயாரிப்புத் திறன் நாள் ஒன்றுக்கு 1,500 லிட்டரில் இருந்து, 15 ஆயிரம் லிட்டராகவும், பால் உபபொருள்கள் பண்ணையின் உற்பத்தித் திறனானது, தற்போதைய அளவான நாள் ஒன்றுக்கு 7,500 லிட்டர் என்ற அளவிலிருந்து, 68 ஆயிரம் லிட்டர் என 9 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல பன்னீர், தயிர், லஸ்ஸி, புரோபயோடிக் லஸ்ஸி, மோர் பாக்கெட் உள்ளிட்ட வற்றின் உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பொதுமக்களைக் கவரும் வகையில், கோடையில் புதிய ரக ஐஸ்கிரீம், குளிர்பானம் உள்ளிட் டவை அறிமுகம் செய்யப்படும். அந்த வரிசையில், நிகழாண்டு கோடை வெயிலில் பொதுமக்கள், குழந்தைகளைக் கவரும் வகையில் குச்சி ஐஸ் வகைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. மாங்கோ, ஸ்ட்ராபெர்ரி, கிரேப், பைனாப்பிள், ரோஸ்மில்க் எனப் பல்வேறு சுவைகளில் குச்சி ஐஸ்கள் விற்பனைக்குக் கிடைக்கும். குச்சி ஐஸ் ஒன்றின் விலை ரூ.10 ஆகும். இப்போது, ஆவின் பாலகங்களில் குச்சி ஐஸ்கள் விற்பனைக்கு கிடைக்கும்”என்றார் அவர்.

Related Posts