தமிழ் குரல் / AI Voice
நிறைய பேர் கார் சீட்டை ஸ்டியரிங் அருகே நட்டுகுத்தலாய் வைத்து சன்டைக்காட்சி சீன் போல டென்ஷனாய் வண்டி ஒட்டுவதின் காரணமே – அவர்களுக்கு கண்ணாடி வழியாய் ரோடு சுமார் 5 -8 அடி முன்னால் தான் தெரியும். இதனால் முன்னாள் போகும் வன்டியை இடிப்பது, பார்க்கிங் எரர் மற்று பல விஷயங்கள் உயரம் இல்லாதவர்களுக்கு பிரச்சினை. இதில் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள் தான். 2014 நியூயார்க் ஆட்டோ ஷோவில் ஒரு புது வகையான டெக்னாலஜியை ரேஞ் ரோவர் அறிமுகபடுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் பானட் வழியாய் தெள்ள தெளிவாய் சாலையை பார்க்க முடியும்.

இது எப்படி பானட் கண்ணாடியில் செய்யபட்டதா இஞ்சின் மறைக்காதான்னு கேட்கிறவங்களுக்கு இது சாதா பானட் தான் ஆனா இது எப்படி வேலைசெய்யும்னா – இதில் ஹைடெக் 3டி கேமரா இருக்கும் அதன் மூலம் தரை பிம்பத்தை ஷூட் செய்து அதை பானட் வழியாய் புரஜக்ட் செய்து உண்மையில் தரையை பார்ப்பது போலவே இருக்கும்.
இது போக இது தேவையான நேரத்தில் மட்டும் ஆன் செய்து கொள்ளலாம். தேவையில்லாத போது சாதா பானட் போலவே தான். இதனை நான் கூறுவதை விட நீங்க இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்……வீடியோ லின்க் – https://www.youtube.com/watch?v=1OlqditIsoM
New Tech – Range Rover introduces SEE THROUGH TRANSPARENT BONNET
***********************************************************************************************
The Discovery Vision Concept car will showcase the essence of a future family of SUVs built on Land Rover’s key principles of emotive design, unrivalled capability and ultimate versatility, taken to new levels using new customer-focused advanced technologies.
