காதல், திரில்லர் படமாக தயாராகும் ‘பென்சில்’ ஆல்பம்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக் நடிக்கும் படம’ “பென்சில்”.இந்த படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். இவர் கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல், திரில்லர் படமாக தயாராகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் 12–வது வகுப்பு மாணவன் கேரக்டரில் வருகிறார்.மேலும் ஜி.வி.பிரகாஷ் ஜோடி ‘ஊதா கலரு ரிப்பன்’ ஸ்ரீதிவ்யா.இதற்கிடையில் பிரகாஷூக்கும், பாடகி சைந்தவிக்கும் காதல் மலர்ந்த இடம் செட்டிநாடு வித்யாஸ்ரமம் ஸ்கூலாம்.அதனால், அந்தப் பள்ளியிலேயே காதல் காட்சிகளை படமாக்கச் சொல்லி டைரக்டருக்கு அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம் படத்தின் இசை அமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்!










