காதலர் தினத்தில் வெளியாகும் ”இது கதிர்வேலன் காதல்” ஆல்பம்!
2012ஆம் ஆண்டில் இயக்குநர் ”ராஜேஷ்” இயக்கத்தில் வெளியான ”ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ”உதயநிதி ஸ்டாலின்”. முதல் படத்திலேயே டாப் ஹீரோவாக முத்திரைப் பதித்த இவர் தற்போது ”இது கதிர்வேலன் காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அவரது நிறுவனமான ”ரெட் ஜெயண்ட் மூவீஸ்” தயாரித்து வரும் இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ”நயன்தாரா” நடித்துவருகிறார் என்பதும் எல்லோரும் அறிந்ததே. ரொமான்ஸ் பிளஸ் லவ் சப்ஜெக்டில் தயாரிகியுள்ள இந்த படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியன்று வெளியாகும் என்று தெரியவருகிறது.

















