கவுண்டமணி நடிக்கும் 49 ஒ – ஸ்டார்ட் ஆயாச்சி!.
சென்னையில் நேற்று துவங்கிய மார்கழி மழை துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது . இது பெரு மழை ….ஆம்..சிரிப்பு மழை . Zero rules entertainment என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குனர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49ஒ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்ய ஆயத்தமாகி விட்டது..இந்த கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு பஞ்சமா என்ன!!!

கடந்த கால் நூறாண்டுகளுக்கும் மேலாக படங்களை தேர்வு செய்து நடிக்கும் கவுண்டமணி , இந்த படத்தை தேர்ந்து எடுக்க படத்தின் தலைப்பான 49 ஒ என்ற பரப்பான தலைப்பு மட்டுமின்றி , வித்தியாசமான கதை பின்னணியுமே காரணம் என்கிறாராம்.

சமீபத்திய வாக்காளர் பட்டனில் தேர்ந்து எடுத்தல் அல்லது வேண்டாம் என்று ஒதுக்குதல் என்பதுக்கு ஒதுக்கப்பட்ட இந்த எண்ணின் பின்னணியில் தயாராகும் படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயி ஆக நடிக்க அவருடன் மயில் சாமி, எம் எஸ் பாஸ்கர் , திருமுருகன் , சோமசுந்தரம் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளார்கள். இந்த படத்தின் இசை அமைப்பாளர் கே. பாடல்களை யுக பாரதி இயற்ற பாபு ஒளிபதிவு செய்ய , மாய கண்ணனின் கலை வண்ணத்தில் , படத்தொகுப்பை பரமேஷ் கிருஷ்ணா செய்கிறார்.


