ஓ… காதல் கண்மணி- ஒரு பார்வை!
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர்சல்மான், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், லீலாசாம்சன், விஜய் டிவி ரம்யா நடிப்பில் உருவான ‘ஓ காதல் கண்மணி’ இன்று ரிலீசாகிவிட்டது. இசை: ஏ.ஆர்.ரகுமான். ஒளிப்பதிவு: பி.சி.ஸ்ரீராம்

கதை
—-
வீடியோ கேம் டிசைனர் வேலைக்கு மும்பைக்கு செல்லும் ஹீரோ ஆதியும்(துல்கர்சல்மானும்) மும்பையில் தனியார் கம்பெனியில் கட்டட கலை நிபுணராக இருக்கும் கோவை பொண்ணு தாராவும்(நித்யாமேனனும்) காதலிக்கிறார்கள். அப்பா, அம்மா டைவர்ஸ் காரணமாக திருமணம் வேண்டாம். பாரீஸ் போய் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார் தாரா. ஆதிக்கும் அமெரிக்கா போய் பெரிய கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற கனவு. வெளிநாடு செல்லும்வரை இருவரும் லிவிங் டு கெதர் ஆக பிரகாஷ்ராஜ் வீட்டில் வாழ்கிறார்கள். இருவருக்கும் வெளிநாட்டு வாய்ப்பு வருகிறது. லிவிங் டு கெதர் வாழ்க்கைக்கு முடிவு கட்டினார்களா? திருமணத்துக்கு இருவரும் ஓகே சொன்னார்களா என்பது கிளைமாக்ஸ். ஹீரோயினை ஹீரோ செல்லமாக ‘கண்மணி’ என்று கொஞ்சுவதால் படத்துக்கு தலைப்பு ‘ஓ காதல் கண்மணி.’
ஒரு படத்துக்கு நிறைகளும் இருக்கும். குறைகளும் இருக்கும். நம்மவர்கள் முதலில் ரசிப்பது குறைகளைதான்.
ஓ…காதல் கண்மணி 10 குறைகள்
——————————-
1) குழந்தைகள், நடுத்தர வயதை கடந்தவர்கள், அடிமட்ட ரசிகர்களுக்கு பிடிக்காத கொஞ்சம் அக்மார்க் ‘ஏ’ சென்டர் படம்.
2) இன்றைய காலகட்டத்துக்குதக்கபடி விறுவிறு திரைக்கதை, பாஸ்ட் எடிட்டிங்கட், குழந்தைகளையும் முணுமுணுக்க வைக்கும் பாடல்கள் இல்லை
3) முந்தைய மணிரத்னம் படங்களை போல இதிலும் ‘மருந்துக்கும்’ காமெடி கிடையாது.
4) முதற்பாதியிலும், இடைவேளைக்குபின் சில இடங்களில் போரடிக்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் முந்தைய மழை காட்சிகள், படம் தொடங்கிய பல நிமிடங்கள் இழு…இழு
5) பாடல்கள் கொஞ்சம் ஏமாற்றம்தான்.
6) மணிரத்னத்தின் முந்தைய படங்களில் பார்த்த அதே மின்சார ரயில், புறாக்கள்பறப்பது, மின்சார ரயில் பயணம், கடற்கரையில் ஜீப் செல்லும் காட்சி, ஹீரோ, ஹீரோயின் கட்டிலில் ரொமான்ஸ் செய்யும் டாப் ஆங்கிள் காதல் காட்சிகள் போராடிக்கிறது.
7) படம் முழுக்க காதலர்கள் இருவரும் காரிலே, பைக்கிலோ, ரயிலிலோ சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் சுவாரஸ்யம் இல்லை
8) பிரகாஷ்ராஜ்- ஞாபகமறதியால் அவதிப்படும் லீலாதாம்சன் காட்சிகளில் அழுத்தம் இல்லை. இன்னமும் அமெரிக்க மோகத்தில் இளைஞர்கள் இருப்பதெல்லாம் அந்த கால பாணி.
9) நாடு எவ்வளவோ முன்னேறிக்கொண்டு இருக்கிறது. நான் வேஸ்ட் மாம்பலம் பையன் என்கிறார் ஆதி. நான் தாரா காலிங்கராய் என்கிறார் ஹீரோயின் . இதெல்லாம் தேவையா?
10) காதலை தவிர படத்தில் வேறு உருப்படியான விஷயங்கள் இல்லை.
ப்ளஸ்கள்
——-
1) இன்றைய இளைஞர்களை குறித்து, ‘பெரியவர்கள்’ மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், வைரமுத்து, நடுத்தர வயதுக்காரர் ரகுமான் ஆகியோர் இணைந்து எடுத்த அருமையான இளமை ததும்பும் படம். சீன்கள், வசனங்கள் அவ்வளவு பிரஷ்!
2) பி.சியின் கேமரா அவ்வளவு அழகு. குறிப்பாக, ஹீரோயின் நித்யாமேனன் தாரா கேரக்டரில் பின்னுகிறார். அவருடைய காஸ்ட்யூம்கள், குளோசப் காட்சிகள், சின்ன, சின்ன எக்ஸ்பிரஷன்கள் வாவ்!
3) லைவ் டப்பிங்கில் படப்பிடிப்பு நடத்தவது சிரமம். லைவ் டப்பிங்கில் ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட ஆர்ட்டிஸ்ட்கள் நடிப்பு, டயலாக் டெலிவரி, குரல் பதிவு சூப்பர்
4) தமிழ்சினிமாவுக்கு நல்ல நடிகை கிடைத்துஇருக்கிறார். வெல்கம் லீலாதாம்சன். வழக்கமான வில்லத்தனம், கோபப்பார்வை இல்லாமல் கணபதியாக பிரகாஷ்ராஜ் கலக்கியிருக்கிறார்.
5) வழக்கமான மணிரத்னம் படத்தில் இது மாறுபட்டது என்பதை வீடியோ கேம் பேக்கிரவுண்டில் எழுத்து போடும்போதே தெரிகிறது. கதையோடு வீடியோ கேம் சேர்ந்து இருப்பது, அது சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்றைய டிரென்டுக்கு மணிரத்னம் யோசித்து இருப்பதை காண்பிக்கிறது..
6) லிவிங் டு கெதர் வாழ்க்கைமுறையை காண்பித்தாலும் எந்த இடத்திலும் வரம்பு மீறிய காட்சிகள்,முகம் சுளிக்க வைக்கும் முத்தக்காட்சிகள் கூட இல்லை. பாராட்டலாம்
7) காதல் கதை என்றாலும் வெளிநாட்டில், கொடைக்கானலில் டூயட், பின்னால் பத்து ஆடுவது, செட் போட்டு கலர் கலர் உடைகளில் ஆடுவது, செப்டம்பர் மாதம் போன்ற பாடல்கள் இல்லை. எல்லா பாடல்களும் மான்டேஜ் முறையில் எடுக்கப்பட்டுள்ளது. சினிமா தனம் இல்லாத பாடல்கள்.
8) படம் போராடிக்கவில்லை. பல இடங்களில் இளமையாகஇருக்கிறது. குறிப்பாக, ஹீரோயின், ஹீரோ பேசும் இயல்பான வசனங்கள் அவ்வளவு யதார்த்தம். அவர்களின் நடிப்பில் செயற்கைதனம் இல்லை.
9) படம் பார்க்கும்போதும், படம் பார்த்திட்டு வரும்போதும் அட,இதுதான் இன்றைய ஜோடிகள். இதுதான் அவங்க வாழ்க்கை முறை. இதுதான் இப்போதைய காதல் என்று மனசுக்குள் ஒரு இனம் புரியாத பரவசத்தை ஏற்படுத்திகொடுக்கிறது ஓ காதல் கண்மணி.
10) ஒரு இயக்குனருக்கு சமூக பார்வை முக்கியம். கிளைமாக்சில் எக்ஸ்ப்ரிமென்டல் பண்ணாமல், இளைஞர்களின் பார்வையை வேறுபக்கம் இழுக்காமல், தனது அழுத்தமான முத்திரையை அழகாக பதித்து இருக்கிறார் மணிரத்னம்.


