ஒரு திரில்லராகவும், சூப்பர் நேச்சுரல் படமாகவும், காதலை மையமாக கொண்ட ஜீரோ திரைப்படஆல்பம்

ஒரு திரில்லராகவும், சூப்பர் நேச்சுரல் படமாகவும், காதலை மையமாக கொண்ட ஜீரோ  திரைப்படஆல்பம்

புளு ஒஷன் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் மாதவ் மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ஜீரோ.இந்த படத்தில், அஸ்வின், ஷிவ்தா ஜோடி. சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு–பாபு குமார், படத்தொகுப்பு–ஆர். சுதர்ஷன், இசை–நிவாஸ் கே.பிரசன்னா, இயக்கம்– ஷிவ் மோஹா, தயாரிப்பு–பாலாஜி காபா.


““ஜீரோ” திரைப்படம், தமிழ் சினிமாவில் இது வரை சொல்லப்படாத ஒரு புதிய திரைக்கதையின் அடிப்படையில் ஷிவ் மோஹாவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் உண்மையான காதல், தடைகளையெல்லாம் கடந்து பல ஜென்மங்களிலும் வெற்றி பெறும் என்ற கருத்துடன் உருவாகி இருக்கிறது.” என்றனர்.

இப்படத்தை வெளியிடுவது பற்றி புளூ ஓஷன் எண்ட்டர்டெய்ன்மெண்ட் நிறுவனர் கோ. தனஞ்செயன் பேசும்போது, “ஜீரோ’ திரைப்படத்தின் கதையும், உருவாக்கமும், எங்கள் குழுவிற்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. ஒரு திரில்லராகவும், சூப்பர் நேச்சுரல் படமாகவும், காதலை மையமாக கொண்ட இப்படம், எங்களை மிகவும் கவர்ந்தது போல, பார்வையாளர்களை கவரும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் போல, புதிய முயற்சிகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்வகையில் புளூ ஓஷன் பயணிக்கும்…” என்றார்.

Related Posts