ஐஸ்வர்யா ஆர் தனுஷின் “வை ராஜா வை”! ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்!
கல்பாத்தி எஸ் அகோரம் நடத்தும் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட். சார்பில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து, ஐஸ்வர்யா ஆர் தனுஷ் இயக்கத்தில் உருவான “வை ராஜா வை” விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தில் நவரசத்துடனும் இளமை துள்ளளுடனும் “இளமை நாயகன்” கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், “அழகிய தமிழ் மகள்” பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர், டானியல் பாலாஜி வில்லன் கதாபத்திரத்திலும், விவேக் மாறுபட்ட கதாபத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுருடன் சேர்ந்து சதீஷ், மனோ பாலா, M.S.பாஸ்கர், மயில் சாமி காமடியில் கலக்க்கியிருக்கிறார்கள்.முதல் முறையாக இயக்குனர் வசந்த் சாய் கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக நடித்து இருக்கிறார், டாப்சி மிக சிறப்பான கதாபத்திரம் ஏற்று நடித்து இருக்கிறார், மேலும் சண்டை கட்சியில் தூள் கிளப்பி இருக்கிறார்.

இயக்குனர் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் இயக்கிய முதல் படம் “3”. தனுஷ்’ ஐ வைத்து அழுத்தமான காதல் கதையில் bipolar disorder என்ற மன நோயையின் தாக்கத்தையும் அதன் பாதிப்பையும் உணர்த்தும் வகையில் இயக்கியிருந்தார். அதில் வரும் “why this kolaveri di” பாடல் உலகம் முழுவதும் அனைவரையும் வசீகரித்து இன்று வரை அசைபோட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே. மிகுந்த எதிப்பார்பிக்கிற்கு இடையே அவரின் தனது இரண்டாவது படைப்பான “வை ராஜா வை” படத்தை இயக்குகிறார்.ருலேட் என்ற கேம் தமிழ் சினிமாவிற்கு புதுசு, அது அனைத்து மக்களுக்கும் புரியும் படி கதை சொல்லும் விதத்திலும் காட்சி படுத்தும் விதத்திலும் திறம்பட செயல் பட்டுள்ளனராம்
முதல் படத்தில் அனிருத்துடன் பணியாற்றிய ஐஸ்வர்யா இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றியுள்ளார். படத்தின் பாடல்கள் அனைவராலும் வரவேற்க்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் intuition எனற special power’ஐ மைய்யமாக வைத்து காதல், காமெடி, திரில்லர் என கதையை அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் ஒரு கமர்சியல் எண்டர்டெயினராக திரைக்கதை அமைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ஆர் தனுஷ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் (முதல் டிரைலர் 7.7 லட்சங்கள் மற்றும் இரண்டாவது டிரைலர் 2 லட்சங்கள்) அனைவரின் பாராட்டையும் பெற்றது. இதில் கொக்கி குமாராக வரும் தனுஷின் சிறப்பு தோற்றம் அனைவராலும் ரசிக்கப்படும் வகையில் அமைக்கபட்டிருக்கிறது. அதனால் படத்தின் எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

இப்படத்தை பார்த்த தணிக்கைகுழுவினர் ‘U’ சான்றிதழ் வழங்கி படக்குழுவனரையும் இயக்குனர் ஐஸ்வர்யா ஆர் தனுஷையும் பாராட்டினர். தணிக்கை குழுவினரின் பாராட்டு தனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதினார் இயக்குனர்.உலகமெங்கும் வா ராஜா வா என்று ரசிகர்களை அழைக்க, வரும் மே 1ல் வெளியாகிறது வை ராஜா வை.








