ஐடிஐ முடித்தவர்களுக்கு கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Stipendiary Apprentice
மொத்த காலியிடங்கள்: 20
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Electrician – 05
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,800
கல்வித்தகுதி: ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
02. Motor Mechanic Vehicle – 05
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,800
கல்வித்தகுதி: ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
03. Mechanical Diesel – 02
பயிற்சி காலம்: 2 வருடம்
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.2,400, இரண்டாம் வருடம் மாதம் ரூ.2,800 வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
04. Programming and System Administration Assisstant – 03
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,100
கல்வித்தகுதி: அறிவியல் பாடப் பிரிவில் +2 முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
05. Medical Lab Technician (Radiology) – 01
06. Medical Lab Technician (Pathology) – 01
பயிற்சி காலம்: 6 மாதம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,100
07. Gardner – 03
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,100
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 16 முதல் 22-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படும் இடம்: General Service Organisation, Kalpakkam/Anupuram
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.04.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer – III, General Services Organisation, Department of Atomic Energy, Kalpakkam – 603102 Kancheepuram District.


