ஏ.டி.எம் -ல் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம்!

ஏ.டி.எம் -ல் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம்!

இனி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
jan 3 ATM 2
தற்போது, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாகவும், அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாகவும் பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து “அவ்வாறு வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளதக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்த ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை”எனவும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரபர்தி தெரிவித்துள்ளார்.

Now, Pay More For ATM Transactions
******************************************************
Amid growing clamour from banks to charge customers for transactions at ATMs to make them economically viable, RBI Deputy Governor K C Chakrabarty said the regulator will have no objections if the lenders charge “reasonable fee” for such services.