ஏர்டெல் ஜீரோ சோர்ஸ் கோட் அறிமுகம் !

ஏர்டெல் ஜீரோ சோர்ஸ் கோட் அறிமுகம் !

எப்ப பாரு நெட் பேக் காலி நெட் பேக் காலினு புலம்பல் ஓவரா இப்ப கேட்கும் காரணம் அதிகப்படியான சோஷியல் மீடியா உபயோகம் தான். இதுல அவன் என் காசை திருடிட்டான் இவன் என் டேட்டாவை அபக் பண்ணிட்டான்னு குரல் கேட்கும் அதற்கு காரணம் நெட் நியூட்ட்ராலிட்டி (‘Net Neutrality.’) என்னும் ஒரு கான்செப்ட் இல்லாதது தான்.
ravi apr 8
இது என்ன இதை முதன் முதலில் அடிச்சு ஒடிச்சு பெரிய ஜாம்பவானான கூகுள் / ஃபேஸ்புக் போன்றவர்களின் கொட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் அடுக்கியதை சில மாசம் முன்பு போட்டிருந்தேன், படிக்காதவர்களுக்கு ஒரு சின்ன ஸ்னிப்பட்…… அதாவது நீங்கள் ஏர்செல் வைத்திருந்தால் அவர்களுடன் வர்த்தகம் புரியும் அவர்களுக்கு ஆமா சாமி போடும் கம்பெனிகளுக்கு மட்டும் நீங்கள் மொபைல் டேட்டா வழியாய் வெகு வேகமாய் பயணிக்க முடியும், அவர்களின் எதிரி சைட்களுக்கு சங்கு சக்கரம் தான். இதை தான் எஸ் சி வி / சுமங்கலி விஷம் என்னும் கேபிள் கம்பெனியும் செய்தத்து நினைவிருக்கலாம்.

இனிமே அப்படியெல்லாம் பண்ணக்கூடாது எல்லோருக்கும் ஒரே இணையவழி சேவை – எல்லோருக்கும் ஒரே ஸ்பீட் – எல்லோருக்கும் ஒரே இன்டர்னெட் குவாலிட்டி என்னும் ‘Net Neutrality.’ கான்செபட்டை கொண்டு வந்த மகான் டிம் வூ என்னும் கொலம்பியா பல்கலைகழக விரிவுரையாளர் தான். இதை அடுத்து போன மாதம் இந்திய அரசாங்கம் Digital India program என்னும் புது கான்செப்ட்டை உருவாக்கி பல ஓப்பன் சோர்ஸ்களுக்கு தன் கதவை திறந்து விட்டது.

இதன் மூலம் அரசுக்கு அல்லது அரசை ஒட்டி இருக்கும் சேவைகளுக்கு தனியார் கம்பெனி மூலம் விரைவு சொல்யூஷன் பெற முடியும். அந்த வரிசையில் ஏர்டெல் நிறுவனம் “ஏர்டெல் ஜீரோ” – Airtel Zero என்னும் கான்செப்ட்டை இப்போது உருவாக்கி இதன் மூலம் பல டெவலப்பர்களுக்கு ஏர்டெல் ஜீரோ சோர்ஸ் கோடை அறிமுகபடுத்தியது நேற்றூ. இதன் மூலம் ஜீரோ பேலன்ஸ் உள்ள ஏர்டெல் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட் பெயிட் ஆட்கள் தங்களுக்கு பிடித்த இணையத்தள அல்லது சோஷியல் மீடியாவை உபயோக்கிக்க முடியும்.

இது எப்படி என்றால் உதாரணத்திற்க்கு நாக்டெல் கால்கள் மொபைல் வழியே செய்ய நாக்டெல் ஆப்ஸுக்கு மொபைல் டேட்டா என்னும் இணைய தொடர்பு தேவை. எனக்கு வணிகம் அதிகம் ஆக வேண்டுமெனில் நான் இந்த ஒப்பன் சோர்ஸில் நான் எனது மொபைல் ஆப்ஸை என்கோட் செய்தால் எனது வாடிக்கையாளர்கள் இலவச இணைய வழி தொலைபேசி மூலம் உலகம் முழுவதும் பேச இயலும்.

சரி ஏர்டெல் எப்படி இலவசமாய் எனக்கு இன்டெர்னெட் கனெக்ட்விட்டியை தரும் என்றால் டோல்ஃப்ரீ ஆக்ஸஸ் மூலம் நாங்கள் அதற்க்கு பணம் கட்டுவோம் நீங்கள் ஜீரோ பேலன்ஸில் இணையத்தை உபயோகிக்க முடியும். இனிமே ஃபேஸ்புக் / வாட்ஸப் என அத்தனை சோஷியல் மீடியா பயன்பாட்டுக்கும் இலவசமாகும் தூரம் இல்லை – இதனால் இணையவழி போராளிகள் அதிகம் உருவாகி நிறைய கொந்தளிப்புகள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த ஒபெரா பிரவுசர் வழி இணையபயன்பாடு என்ற லொட்டு லொசுக்கு தொல்லை இனிமேல் இல்லை.

Use your mobile phone with ZERO BALANCE –

Related Posts