‘ஏன்யா இவ்வளவு கேவலமா போயிட்டே’- துக்ளக் குருமூர்த்திக்கு டிடிவி தினகரன் கேள்வி!

‘ஏன்யா இவ்வளவு கேவலமா போயிட்டே’- துக்ளக் குருமூர்த்திக்கு டிடிவி தினகரன் கேள்வி!

அண்மையில் நடந்த துக்ளக் விழாவில் தரம் தாழ்ந்து பேசிய குருமூர்த்தியின் பேச்சுக்கு ‘ஏன்யா இவ்வளவு கேவலமா போயிட்டே’ என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துக்ளக் வார இதழின் 51வது ஆண்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர் குருமூர்த்தி, “வீடு பற்றி எறியும் போது, கங்கை ஜலத்திற் காக காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம். அதுபோல, திமுகவை தோற்கடிக்க அதிமுக – பாஜக கூட்டணியில் சசிகலாவையும் ஏற்றுக் கொள்ளலாம்,” என்று கேஷூவலாக தெரிவித்தார்.

இதை பல தரப்பினரும் கண்டித்த நிலையில் டிடிவிதினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக் கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த சோ தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.

அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல !

துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது”என்று கமெண்ட் போட்டுள்ளார்

Related Posts