என்ன அநியாயம்? – சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் குறித்து ஐகோர்ட்
சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர்,ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘தியேட் டர் களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், அதை மீறி தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆன்லைன் மூலம் புதிய படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த அளவுக்கு பொதுமக்களுக்கு எந்தவொரு வசதியும் செய்து தரப் படுவது இல்லை. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு விசாரித்தது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “புதிய படங்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும்போது ரூ.300 அல்லது அதற்கு மேலும் கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசு அதிகபட்ச கட்டணமாக ரூ.120 மட்டுமே வசூலிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக 2 அர சாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஏசி, ஏசி அல்லாத தியேட்டர்கள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறியுள்ளது.
ஆனால் எல்லா தியேட்டர்களிலும் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல விதிமீறல்கள் இருப்பது அப் பட்டமாக தெரிகிறது. இந்த விதிமீறல்களை வணிகவரித் துறை மற்றும் தியேட்டர்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து, குறைந்த கட்டணத்தில் சினிமா பார்ப்ப தற்கான வசதியை மக்களுக்கு அளிக்க வேண்டும். கட்டண நிர்ணயம் என்பது வெறும் பேப்பர் அளவில் இருந்து விடக்கூடாது.
எனவே, இந்த விதி மீறல்கள் குறித்து கண்காணிக்க தனிக் குழுவை அரசு நியமிக்க வேண்டும். தியேட்டர்கள் தொடர் பான புகார்களை இக்குழுவுக்கு அனுப்புவதற்கான வழிமுறை களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது இந்தக் குழு முறையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகி றோம். தமிழக அரசு 3 வாரங் களுக்குள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்


