உணவு உத்தரவாத சட்டம் : குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உணவு உத்தரவாத சட்டம் : குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உணவு உத்தரவாத சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது உணவு உத்தரவாத சட்ட மசோதா. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து அமலுக்கு வந்தது உணவு உத்தரவாத சட்டம்.

இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்ததார். இதனால் உணவு பாதுகாப்பு மசோதா, சட்ட அந்தஸ்து பெற்று உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், முன்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் காலாவதியானது. நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உணவு கிடைக்க இந்த மசோதா வகை செய்கிறது. குறிப்பாக 50 சதவீத நகர்ப்புற ஏழைகளுக்கும், 75 சதவீத கிராமப்புற ஏழைகளுக்கும் மலிவு விலையில் உணவு தானியம் வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
sep 12 -food-security-bill
முன்னதாக “மத்திய அரசு உணவு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இது பட்டினிக்கு எதிராக எடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நடவடிக்கையாகும். இதன்மூலம் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தின் மீது அக்கறை செலுத்தினால் உணவு பாதுகாப்பு சட்டம் வெற்றியடையும்.” என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் தமிழகத்தின் பொது வினியோகத் திட்டத்துக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தால் என்ன பலன் என அரசுத் தரப்பு வட்டாரங்களிடம் கேட்டபோது: “தமிழக அரசின் பொது வினியோகத் திட்டத்துக்கு மாதத்துக்கு 3.16 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில் 2.96 லட்சம் டன் அரிசி கிலோ 5.65 ரூபாய் விலையில் மத்திய அரசால் அளிக்கப்படுகிறது. இதன் மதிப்பு 167.24 கோடி ரூபாய் மீதமுள்ள 20 ஆயிரம் டன் அரிசி மத்திய அரசிடம் இருக்கும் இருப்புக்கு ஏற்ப கிலோ 8.30 ரூபாய்க்கு மொத்தம் 16.60 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக 183.84 கோடி ரூபாய் செலவாகிறது. உணவு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தால் தமிழக அரசுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை மத்திய அரசு 2.24 லட்சம் டன்னாக குறைக்கும். இந்த ஒதுக்கீட்டை கிலோ 3 ரூபாய்க்கு அளிக்கும். மீதமுள்ள 92 ஆயிரம் டன் அரிசியை வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு மத்திய அரசு அளிக்கும்
விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்; இந்த விலை கிலோவுக்கு 8.30 ரூபாய் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் அரிசி விலையை உயர்த்தக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ள மத்திய அரசு இதுகுறித்து, நிறைவேற்றப்பட்ட, உணவு பாதுகாப்பு மசோதாவில் குறிப்பிடவில்லை.

சட்டம் அமலானால் தமிழகத்தின் மாதாந்திர ஒதுக்கீடான, 3.16 லட்சம் டன்னில் 2.24 லட்சம் டன் அரிசி, கிலோ 3 ரூபாய்க்கு அளிக்கப்படும். இதன் மதிப்பு 67.20 கோடி ரூபாய்; மீதமுள்ள 92 ஆயிரம் டன் அரிசியை கிலோ 8.30 ரூபாயில் கொள்முதல் செய்தால் 76.36 கோடி ரூபாய் செலவாகும். மொத்தமாக 3.16 லட்சம் டன் அரிசியை கொள்முதல் செய்ய 143.56 கோடி ரூபாய் செலவாகும். இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வருவதன் மூலம் தமிழக அரசுக்கு அரிசி கொள்முதலில் மாதத்துக்கு 40.28 கோடி ரூபாய் மீதமாகும்.”என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

National Food Security Bill gets President’s approval
*************************************************************************
President Pranab Mukherjee has given his assent to the National Food Security Bill 2013.The Bill, which has now become an Act, was passed by Parliament in the recently concluded Monsoon session.India has now joined the select league of nations that guarantee food grains to its majority of population. The food security programme will be the largest in the world.