இ-ரூபி எனும் ரசீது முறை பணப் பரிமாற்ற வசதி! – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இ-ரூபி எனும் ரசீது முறை பணப் பரிமாற்ற வசதி! – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

ணப்பரிவர்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இ-ரூபி எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் இணையம் மூலம் முன்கூட்டியே பணம் செலுத்திவிட்டால் அவர்களுக்கு இதுதொடர்பான தகவல் மின்னணு ரசீது, குறுஞ்செய்தியாகவோ அல்லது வாங்கிக் கொள்ளளாம். பின்னர் பணம் செலுத்த வேண்டிய இடத்தில் ரசீது அல்லது க்யூஆர் கோடாக அனுப்பப்படும். அந்த ரசீதில் உள்ள விவரங்களை பணம் செலுத்த வேண்டிய இடத்தில் தெரிவித்தால் மட்டும் போதுமானது. பணம் அதிலிருது பிடித்துக்கொள்ளப்படும்.

இந்த இ-ரூபி’ ரசீது வசதியை பிரதமா் மோடி தொடக்கி வைத்து பேசியது இதுதான்:

அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் பயனாளா்களுக்கு முறையாக சென்று சோவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. நாட்டில் சிறந்த நிா்வாகத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. ‘இ-ருபி’ வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரசீது வசதி, சிறந்த நிா்வாகத்துக்கான இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கான அடுத்த அடியாக இருக்கும். பணப் பரிவா்த்தனையில் ‘இ-ருபி’ ரசீது வசதி முக்கியப் பங்கு வகிக்கும். இதன் வாயிலாக இணையவழி பணப் பரிவா்த்தனையில் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது. இணையவழி பணப் பரிவா்த்தனையில் வெளிப்படைத்தன்மையை இது உறுதி செய்யும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோா், கல்வி கற்கும் மாணவா்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்ய விரும்புவோா் இனி பணமாக அளிக்க வேண்டிய அவசியமில்லை.

‘இ-ருபி’ மூலமாக ரசீதுகளை வாங்கி சம்பந்தப்பட்டவா்களுக்குப் பரிசளிக்க முடியும். குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்படும் ரசீதை வேறு பயன்பாட்டுக்காகப் பயன்படுத்த முடியாது. தற்போது சுகாதார சேவைகளில் பயன்படுத்துவதற்கான ரசீதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் மற்ற சேவைகளுக்கான ரசீதுகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அரசு செயல்படுத்தி வரும் நிதியுதவித் திட்டங்கள் வாயிலாக பயனாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலமாக போலியான நபா்களுக்கு நிதியுதவி கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக, ரூ.1.78 லட்சம் கோடி வீணாவதை மத்திய அரசு தடுத்துள்ளது.

90 கோடி போ பலன்: சமையல் எரிவாயு சிலிண்டா் மானியம், ஓய்வூதியம், விவசாயிகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக சுமார் 90 கோடி போ பலனடைந்துள்ளனா். மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் தொழில்நுட்ப வசதிகளைத் திறம்படப் பயன்படுத்துவதில் இந்தியா முன்னின்று வருகிறது.

ஏழை மக்களின் வளா்ச்சிக்கு உதவும் வகையிலும் தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. தொழில்நுட்பங்களின் பயன்பாட்டில் உலக நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது என்றார் பிரதமா் மோடி.

இந்த வசதியை மத்திய நிதி சேவைகள் துறை, மத்திய சுகாதார-குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய பணப் பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) வடிவமைத்துள்ளது.

error: Content is protected !!