ஆம் ஆத்மியிடம் சில கேள்விகள்! By டிமிடித் பெட்கோவ்ஸ்கி
காங்கிரஸ் கட்சியின் 7 பெரும் ஊழல்களை வெளிப்படுத்துவதாக அறிவித்து உள்ளீர்கள்…..
கேள்வி 1. சி .பி ஐயும், போலிசும் உங்களது கன்ட்ரோலில் இல்லை. கைது நடவடிக்கையை எப்படி சட்ட பூர்வமாகச் செய்வீர்கள்?

கேள்வி 2. ஏற்கனவே உங்களுக்கு ஆதரவு தந்த விஷயத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. ஊழலை வெளிப்படுத்திய மறு நிமிடம் உங்கள் அரசு நிலைக்காது. நிலைக்காத ஒரு அரசால் எப்படி மறுபடியும் வழக்குகளை தொடர முடியும்? அல்லது ‘ஐயோ பார்த்தீங்களா மக்களே, நாங்க நடவடிக்கை எடுக்கும் முன்னரே எங்களை கவிழ்த்துட்டாங்க’ அப்பிடின்னு சொல்லி மறுபடியும் தேர்தலில் வாக்கு கேட்க இது ஒரு நாடகமா?
கேள்வி 3. ஒருவேளை காங்கிரஸ் ஆதரவு வாபஸ் என்றால் பாஜக வின் ஆதரவுடன் ஊழல் சக்திகளை ஒழிக்க முருபடுவீர்களா? காரணம் உங்கள் இருவரின் பொது எதிரி காங்கிரஸ்…….
கேள்வி 4. இல்லை, எங்களிடம் சட்ட ரீதியான வழிமுறைகள் இருக்கின்றன என்று சொல்லி ஒரு ஒய்வு பெற்ற நீதிபதியை மிக்சர் திங்க வைத்து கமிஷன் போட்டு அறிக்கை கேட்பீர்களா? (எங்க அப்பா காலத்திலிருந்து பால் கமிஷன், சர்க்காரியா, சதாசிவம், சர்க்கரை ஊழல், அரிசி பெற ஊழல் என்று பலதும் பார்த்து விட்டோம். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அந்த அறிக்கையின் காகிதங்கள் குழந்தையின் கக்கா துடைக்கக் கூட பயன்படுத்தப் படவில்லை என்பதை நாடே அறியும்)
இதையெல்லாம் விட சுலபமான வழிய இருக்கிறது. மக்களிடம் சென்று, நான் காங்கிரசுடன் சேர்ந்து தவறு செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள் என்று கூறுங்கள். ஒருவேளை டில்லி மக்கள் உங்களை மன்னிக்கலாம்!
கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி!
– டிமிடித் பெட்கோவ்ஸ்கி


