அட்றா மச்சான் விசிலு – நியூ ஆல்பம்!

அட்றா மச்சான் விசிலு – நியூ ஆல்பம்!

பல்வேறு முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களாக இப்போதைய இளவட்ட ஹீரோக்கள் நடிப்பதைத்தான் பல படங்களில் பார்த்திருக் கிறோம். ஆனால் அட்றா மச்சான் விசிலு என்ற படத்தில் டாக்டர் சீனிவாசனின் ரசிகராக மிர்ச்சி சிவா நடித்து வருகிறார்.இந்த அட்றா மச்சான் விசிலு படத்தை ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கி வருகிறார். இதில் சிம்மக்கல் சேகர் என்ற வேடத்தில் மிர்ச்சி சிவா நடிக்க, டாக்டர் சீனிவாசன் பவர்ஸ்டார் என்றொரு நடிகராகவே நடிக்கிறார். அவரது ரசிகர் மன்ற தலைவராக மிர்ச்சி சிவா நடிக்கிறராம். இதனால் படப்பிடிப்பு தளங்களுக்கு டாக்டர் சீனிவாசன் காரில் வந்து இறங்கியதும், ரசிகர்களை திரட்டிக்கொண்டு கோஷம் எழுப்புவாராம் மிர்ச்சி சிவா.


அதோடு, ஏதாவது விழாக்களுக்கு சீனிவாசன் சென்றாலே அங்கே அவர் செல்வதற்கு முன்பே ரசிகர்களை திரட்டி சென்று அவர் வந்ததும் வாழ்க கோஷ மிடுவாராம். இப்படி டாக்டர் சீனிவாசனின் புகழ் பாடும் ரசிகராக இந்த படத்தில் நடித்திருக்கிறாராம் மிர்ச்சி சிவா. மேலும், இப்படத்தில் டாக்டர் சீனிவாசனுடன் நடிக்கும் கனவுக்கன்னியாக ஜாங்கிரி மதுமிதா நடித்துள்ளாராம்.

Related Posts