பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட விண்கல் திசை திருப்பப்பட்டது- நாசா அறிவிப்பு!

பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட விண்கல் திசை திருப்பப்பட்டது- நாசா அறிவிப்பு!

பூமியை சுற்றி ஏராளமான சிறுகோள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவைகள் பூமி மீது மோத வாய்ப்பு இருக்கிறதா? என்று விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள். இதில் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவின் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை நிறுவி ஆய்வு செய்து வந்தனர். இந்த அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு ‘டார்ட்’ என்ற விண்கலத்தை விண் வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலம், பூமியை நோக்கி டிடிமோஸ் பைனரி என்ற விண்கல் வருவதையும், அதனால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கண்டுபிடித்தது.

டிடிமோஸ் பைனரி விண்கல், பூமி மீது மோது வதை தடுத்து அதை திசை திருப்ப நாசா முடிவு செய்தது. அதன்படி அந்த விண்கல் மீது டார்ட் விண்கலத்தை கடந்த மாதம் 26-ந்தேதி நாசா மோத வைத்தது. விண்கலம் வெற்றிகரமாக விண்கல் மீது மோதியதால் அதன் திசையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட விண்கல் வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. 11 மணி 55 நிமிடமாக இருந்த விண்கல்லின் சுற்றுப்பாதையானது விண்கலம் மோதலுக்கு பிறகு 11 மணி 23 நிமிடங்களாக குறைந்துள்ளது. இதன் மூலம் விண்கல்லின் சுற்றுப் பாதையானது 32 நிமிடங்கள் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் விண்கல்லால் ஏற்பட இருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விண்வெளியில் முதல் முறையாக வான் பொருளின் சுற்றுப்பாதை மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!