அமெரிக்கா இந்தியாவை பழிவாங்க நினைத்தால் அதன் வீழ்ச்சி யாராலும் தடுக்க முடியாது!

அமெரிக்கா இந்தியாவை பழிவாங்க நினைத்தால் அதன் வீழ்ச்சி யாராலும் தடுக்க முடியாது!

வ்வொரு சிக்கல்கள் நிறைந்த காலத்திலும் கச்சா எண்ணெய் விலை அளவுக்கு அதிகமாக ஏறும். அதன் பின்னால் இருப்பது அமெரிக்காதான் இருக்கும். அது அமெரிக்காவையும் பாதிக்கும் என்றாலும். கச்சா எண்ணேய் டாலரில் மட்டுமே வாங்கவேண்டும் என்ற அதன் ஆளுமையால், டாலர் தேவை அதிகரிக்கும். அதனால் அமெரிக்கா டாலரை பிரிண்ட் செய்துகொள்ளும் . அப்போது அதன் பொருளாதாரத்தை பாதிக்காது என்பதை விட அதற்கு புதிய எழுச்சியை கொடுக்கும்.

ஆனால் இந்த முறை மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, சீனா இரண்டும் ரஷ்யாவிடம் டாலர் இல்லாமல் வாங்கியதால், அது நினைத்த அளவுக்கு டாலர் தேவை அதிகரிக்கவில்லை. அதனால் அதன் காம்பென்ஷேச்கன் என்பது முடியாமல் போக, பெட்ரோல், டீசல் விலை அங்கே மிக மோசமாக அதிகரிக்க, அதன் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத ஒரு வீழ்ச்சியை சந்தித்தது.

அது மட்டுமல்ல, இந்தியா டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாயை முன்னிறுத்துகிறது. இது நடந்தால், அமெரிக்காவின் வல்லரசு ஆளுமைக்கு சமாதி உறுதி. எனவேதான் இந்தியாவை ஓரம்கட்ட பார்த்தது. அது எதிர்பார்த்தது சீனாவுடன் இந்தியா இனிமேல் ஒத்து போக முடியாது என்று அதை ஓரம்கட்ட பாகிஸ்தானுக்கு F-16 அப்கிரேட் செய்ய உதவியது. அதன் பின்னால் இருந்த இன்னொரு காரணம் சீனாவிடம் இருந்து பாகிஸ்தானை பிர்ப்பது. ஆனால் அதற்கு பதிலாக இந்தியா, சீனாவிற்கு ஆதரவாக ஜிங்யாங் தீர்மானத்தில் ஓட்டுப்போடாமல் ஒதுங்கியதில், 16 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய நாடுகள்.சபையில் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப்போனது. இது அமெரிக்காவின் வல்லரசு சரிவதற்கான் அடையளமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், அமெரிக்க OPEC நாடுகளை பணிய வைத்து மீண்டும் கச்சா எண்ணெய் விலையை குறைக்க வற்புறுத்தியது. ஆனால் அதற்கு அந்த நாடுகள் ஒப்புதல் தராமல் போனது மட்டுமல்ல மேலும் உற்பத்தியை குறைக்கப் போவதாக அறிவித்தது. சவூதியின் இளவரசரை அழைத்து பேச ஜோபைடன் செய்த முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்தது. அது அமெரிக்காவிற்கு பெரும் அசிங்கத்தை சர்வதேச அரங்கில் கொடுத்தது. சீனா தைவானை தாக்கினால், இந்தியா தனது படைகளை சீன எல்லையில் குவிக்கும். அப்படியெனில் சீனா தன் படைகளை கிழக்கு நோக்கி நகர்த்த முடியாமல் போனால், சீனா வெற்றி என்பது கனவாகிவிடும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

ஆனால் நாளை அமெரிக்காவின் எதிர்பார்ப்பு அது இந்தியாவிடம் நடந்து கொள்ளும் விதத்தை பொருத்ததே. அது இந்தியாவை குள்ள.நரித்தனமாக பழிவாங்க முயற்சி செய்தால், இந்தியா எதுவும் செய்யாமல இருக்கிறேன் என்ற ஒரு உத்திரவாதம் போதும் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்யக்கூடும். அடிச்சுக்கிட்டு சாவுங்கடா நாய்களா என்று வேடிக்கை பார்த்தால்.மட்டும் போதும். இதற்கு எல்லாம் காரணம் அமெரிக்காவின் சுயநலமே. இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்சினையை அமெரிக்கா இனிமேலும் கொடுக்க நினைத்தால், அமெரிக்காவின் நிலை மேலும் வீழும் என்பது தவிர்க்க முடியாதது. அது மட்டுமல்ல, இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்காவின் கூட்டாளிகளே சரிதான் என்று பார்க்கிறார்கள். எனவே அதன் கூட்டு களவானித்தனம் டேன்ஸ் ஆட துவங்கிவிட்டது.

இதுவரை அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக ஏதாவது செய்தால், இந்தியா அமெரிக்காவிடம் கெஞ்சும். ஆனால் இன்று, நீ நேர்மையாக இல்லை என்றால் நானும் அதற்கேற்பவே நடந்துகொள்வேன். அதில் உனக்கு.அடிபணிந்து போக மாட்டேன் என்ற விதத்தில் அமெரிக்காவின் தவறுகளை அதன் மண்ணிலேயே போட்டு தாக்கியது. அதற்கு ஆத்திரமடைநத அமெரிக்கா இந்தியா மீது பழி வாங்க வழிகளை தேடுகிறது. அது இப்போது நமது மருந்து உற்பத்தியை வைத்து விளையாடவும், ஜெர்மனி போன்ற அதன் ஆதரவு நாடுகளை வைத்து காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைக்கவும் முயற்சிக்கிறது. அதை செய்ய நேர்ந்தால், இந்தியா-ரஷ்யா-சீனா கூட்டணி அமையும் பட்சத்தில், அமெரிக்காவின் அழிவு துரிதமாகிவிடும். அந்த அழிவுக்கு இந்தியாவின் வலிமை காரணம் என்பதை விட, அமெரிக்காவின் மோசமான பொருளாதார நிலையே காரணம். கச்சா எண்ணெய் வியாபாரம் டாலர் மூலம் நடக்காமல் போகும்போது, அமெரிக்கா வீழ்ச்சியின் பாதத்தை முத்தமிடும்.

மரு.தெய்வசிகாமணி

Related Posts

error: Content is protected !!