உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : ஐசிசி புது அறிவிப்பு!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : ஐசிசி புது அறிவிப்பு!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் முதலாவது இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18 ஆம் தேதி முதல் 22ஆம் தேதிவரை திட்டமிட்டபடி நடக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுதிப்பட கூறியுள்ளது.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி, இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகள் இதில் மோதுகின்றன.

இந்த நிலையில், இந்தப் போட்டி நடப்பதில் திடீர் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டுவதால் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டை சாராத மற்றவர்கள் இங்கிலாந்துக்கு வர அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஆனாலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றை திட்டமிட்டபடி நடத்துவோம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுதிப்பட கூறியுள்ளது.

‘கொரோனா பரவலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எப்படி பாதுகாப்புடன் வெற்றிகரமாக நடத்துவது என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், மற்ற நாட்டு வாரியங்களும் செய்து காட்டியுள்ளன. அதையே தொடர்ந்து செய்ய முடியும் என்று நம்புகிறோம். எனவே திட்டமிட்டபடி இங்கிலாந்தில் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும். இது குறித்து இங்கிலாந்து அரசுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என்று ஐசிசி கூறியுள்ளது.

error: Content is protected !!