திருப்பதியில் விஐபி தரிசனம் வேணுமா? கோவிந்தா! கோவிந்தா! என்று ஒரு கோடி முறை எழுதி வாருங்கள் – தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் விஐபி தரிசனம் வேணுமா? கோவிந்தா! கோவிந்தா!  என்று ஒரு கோடி முறை எழுதி வாருங்கள் – தேவஸ்தானம் அறிவிப்பு

பிரசங்கம் ஒன்று நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. உபத்யஸகர் கூட்டத்தின் இடையே அமைதி ஏற்பட அனைவரும் நிசப்தமாக அவரது உரையைக் கேட்கச் செய்ய என்ன செய்கிறார்? “ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்று உரக்க கோஷிக்கிறார் கூட்டத்தினர் அனைவரும் “கோவிந்தா, கோவிந்தா‘” என்று ப்ரதி கோஷம் செய்கின்றனர். திருப்பதியிலும் ஸ்ரீரங்கத்திலும் பக்தர்கள் தினந்தோறும் “கோவிந்தா! கோவிந்தா!” என்று நாமத்தைச் சொல்லியவாறே தரிசனம் செய்கிறார்கள். கோவிந்த நாமத்தை எல்லோரும் சொல்வார்கள். அதனால்தான் – “ஸர்வத்ர” என்று அதாவது எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் என்று ச்லாகித்து “ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்று கோஷிக்கிறோம். ஹிந்து மதத்திலேயே ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா இந்த கோவிந்த நாமாதான்.

கோவிந்த – அர்த்தம்?

கோ என்பது ஸகல ஜீவராசிகளையும் குறிப்பதாகும். கோக்களுக்கு இந்திரன் கோவிந்தன் “விந்த” என்றால் ஒன்றைத் தேடி நாடி போய் அடைவது பசுக்கள் இப்படி க்ருஷ்ணனிடமே உயிராயிருந்து அவரைத் தேடி அடைந்ததால் கோவிந்தன். “கோ” என்பது பசுவை மட்டும் அல்லாமல் பூமி ஆகாசம், வாக்கு இந்திரியங்கள் ஆகியவற்றையும் குறிப்பது இவையெல்லாம் தேடிப்போய் அடையும் லக்ஷயமான பரமாத்மா அவர் என்பதை கோவிந்த நாமம் தெரிவிக்கிறது.

கோவிந்தா என்ற ஒரு நாமத்தைச் சொன்னால் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் நினைவு கூர்ந்ததாகிவிடும்.

வளரிளம் பருவத்தினரிடையே யே சனாதன தர்மம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 25 வயதிற்கு உட்பட்டோர் ஒரு கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி எடுத்து வந்தால் அவரின் குடும்பத்திற்கு ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம் .. தற்போது L3 VIP Break Darshan முறையில் பக்தர்கள் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் எம்.பி, எம்.எல்.ஏக்கள், போர்டு உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என எழுதினால் சாதாரண பக்தர்களும் விஐபி தரிசனத்தின் சாமி தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.

இது குறித்து ஆலோசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. அறங்காவலர் குழுவின் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய அரங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, மாறிவரும் கால சூழ்நிலையில் சக மனிதனை மதிப்பது, இறை பக்தியுடன் செயல்படுவது ஆகியவை போன்ற அவசியமான செயல்களில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அப்படி இளைஞர்களிடம் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத மாற்றங்களுக்கு மாற்றம் காணும் வகையில் சனாதன தர்மம் பற்றி அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 25 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி எடுத்து வரும் நிலையில் அந்த நபரின் குடும்பத்திற்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படும்.

10 லட்சத்துக்கு ஆயிரத்து 116 முறை கோவிந்த நாமம் எழுதி எடுத்து வரும் பக்தருக்கு மட்டும் சாமி தரிசனம் அனுமதி வழங்கப்படும்.

error: Content is protected !!