விம்பிள்டன் : ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் பெற்றார் கார்லஸ் அல்காரஸ்!

விம்பிள்டன் : ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் பெற்றார் கார்லஸ் அல்காரஸ்!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் உலகில் மிகவும் உயரிய தொடர்களில் ஒன்று விம்பிள்டன் போட்டித் தொடர். இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் தொடர் ஜூன் 26ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி அதாவது நேற்று முடிவடைந்த நிலையில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி விம்பிள்டன் முதன்முறையாக பட்டத்தை தட்டி சென்றார் இளம் வீரர் அல்காரஸ்.சுமார் 4.45 மணி நேரம் நீடித்த இப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைந்தது. விம்பிள்டன் பட்டத்தை 20 வயதான அல்காரஸ் முதல்முறையாக கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெத்வ தேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், 2வது இடத்தில் உள்ள செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.

7 முறை விம்பிள்டன் சாம்பியன் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் என டென்னிஸ் உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த ஜோகோவிச் நேற்று அதிர்ச்சி தோல்வியை தழுவினார். லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஜோக்கோவிச் இளம் வீரருடன் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தார்.

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 36 வயதான ஜோகோவிச் 20 வயதான அல்காரஸ் எதிர் கொண்டார். பரபரப்பான ஆட்டத்தில் இரு வீரர்களும் மாறி மாறி செட் கணக்கில் முன்னிலை வகுத்து வந்தனர். இதனால் ஆட்டம் 4 மணி நேரம் 42 நிமிடம் நீடித்து, கடைசி செட் வரை சென்றது. இறுதியில் இளம் வீரர் அல்காரஸ் முதன்முதலாக ஜோக்கோவிச்சை முதன்முதலாக வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் சென்ற ஜோகோவிச் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியை வென்றது மூலம் இந்திய மதிப்பில் அல்காரஸுக்கு 25 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

error: Content is protected !!