இந்தியா ரூபாயை பொதுப் பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்த தயார் – இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க.!

இந்தியா ரூபாயை பொதுப் பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்த தயார் – இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க.!

டந்த ஆண்டு இலங்கையில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில் அதிபராக இருந்து வந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார். இதையடுத்து ரணில் விக்கிரமசிங்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையின் நிதி அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார். வரும் 21-ம் தேதி அவர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற இந்திய சிஇஓ மாநாட்டில் கூறியதாவது:

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு 2,500 ஆண்டுகால பழமைமிக்கது. இந்தியா மூலம் இலங்கை நிறைய பலன் அடைந்துள்ளது. தற்போது இந்தியா மிகப்பெரிய மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ள நிலையில், இந்தியாவின் ரூபாயை பொதுப் பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இந்திய ரூபாய் பொதுவான செலாவணியாக மாறினால், அதனால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதை பாா்க்க இலங்கை விரும்புகிறது..உலகம் படிப்படியாக வளா்ச்சி கண்டு வருகிறது. அதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. வளமான வரலாறு, கலாசார பாரம்பரியம் என 2,500 ஆண்டுகளாக நீடிக்கும் வா்த்தக உறவுடன் இந்தியாவுக்கு அருகில் இருந்து இலங்கை பயனடைகிறது. ஜப்பான், கொரியா, சீனா போன்ற கிழக்காசிய நாடுகள் 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் கண்டது போல, தற்போது இந்திய பெருங்கடல் பகுதியுடன் இணைந்து இந்தியா வளா்ச்சி காண்கிறது” என்றார்

error: Content is protected !!