தமிழ் குரல் / AI Voice
எல்லோரும் இன்னும் ஆமா ஆனால் இல்லைனு முனங்கிற 500/100 நோட்டு பிரச்சினை 11ஆம் தேதி முதல் சரியாகி விடும் என நினைத்த காரணம் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொள்ளலாம் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. ஏன் தெரியுமா?- நம்ம ஊர் ஏடிம்மில் நாலே நாலு ஸ்லாட் தான் வழக்கம் போல. அதிலும் டை போல்ட் போன்ற பழைய ஏடிம்மில் 3 ஸ்லாட் தான். நம்ம ஊர் பேங்க் அப்பாடக்கர்கள் அனேக ஏடிம்மில் இரண்டே டினாமினேஷனில் (500/1000) தான் பணம் வைக்கும் பழக்கத்தை வைத்திருந்தனர். 100 நோட்டு வெயிட்டு அதிகம் அதனால் அதை லோட் செய்யும் 10 மடங்கு வேலையை 1 நோட்டில் செய்ய முடியும் என்றே. சில அரசு வங்கிகள் மட்டும் 100 ஸ்லாட்டை வைத்திருந்தாலும் பெரும்பாலும் 1400 என்றால் சாரி ஒன்லி 500 டினாமினேஷன் என்று சொல்லி 500க்கு கீழே ஏடிஎம் எடுக்க முடியாத மாதிரி செய்தன.

இதனால் 400 வச்சிருக்கவங்க கூட பேங்கல அல்லது டெபாஸிட் மெஷின்ல 100 போட்டு 500 ஏடிஎம் மூலம் எடுக்க காரணம்.இந்த குழப்படிக்கு முக்கிய காரணம் மத்திய அரசு இன்றே இந்த நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து 2000/500 நோட்டுக்கள் மாற்றி கொள்ளலாம் என அறிவித்த பிறகு தான் ஆப்லங்க மன்டையை சொரிந்து 2000 ஒகே 500 நோட்டு அதே போல இந்த புது நோட்டும் இருக்கு இதை விட்டால் கஷ்டம் அது போக தேவையான ஸ்டாக்கும் பிரின்ட் ஆகலைனு லேட்டா புரிய சரி ஒன்லி 2000 மட்டும் கொடுங்கன்னு சொல்ல அதை வைத்து செல்ஃபி மட்டுமே எடுக்க உபயோகபட்டது.
அதனால் தான் புது 500 நோட்டு ஒன்று கூட அரசு அச்சக அட்கள் கூட செல்ஃபி எடுக்க இயலாமல் போனது. ஒன்லி மோடி அறிவித்த போது ஆர்பிஐ அதிகாரி சாம்பிள் நோட்டை காட்டினர் அதுவும் 000000 எண் இலக்கம் கொண்ட டம்மி நோட்டு.
சரி ஏடிம் திறக்கலாம்னு திறந்து 100 ஸ்லாட்டில் வெறும் 10% தான் மொத்த கொள்ளலவான 16-18 லட்சம் பணத்தில் 10% வெறும் 1.6 லட்சம் தான் வைக்க முடிந்தது. அதையும் பல பேங்குகள் செய்யவே இல்லாமல் போன காரணம் காஸ்ட் ஃபேக்டர் தான். சில பேங்க்தான் கடமை கண்ணாயிரமாய் ஒப்புக்கு சப்பானாய் செய்தது.
14 திங்கட்கிழமை 500 லோட் செய்தால் ஒவ்வொரு ஏடிஎம்மும் 12 லட்சம் வரை கேஷ் இருக்கும் அதனால் அப்போது ஆரம்பித்து அடுத்த 1 வாரத்திர்க்குள் நிலமை சரியாகும் என நினைக்கிறேன். ஏன்னா புது 500 நோட்டு இன்னும் எந்த சாமான்ய இந்தியன் கைகளில் இல்லை என்பதே உண்மையான உண்மை. அதனால் முடிந்த வரை எல்லோருக்கும் தெரியபடுத்தி பதட்டத்தை குறையுங்கள்.
PS – ஏற்கனவே கூறிவிட்டேன் 2000 நோட்டு வடிவம் புதிது என்பதால் அதனை அடக்க ஸ்லாட் மற்றும் டிஸ்பென்ஸிங் ஸ்லாட் இரண்டு இணைக்க 1 மாதம் வரை ஆகலாம் என்பதால் 2000 நோட்டு இப்போதைக்கு சாதகமில்லை.
