இந்திய பத்திரிகையாளர் உள்ளிட்ட பலரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்தது இஸ்ரேல்!

இந்திய பத்திரிகையாளர் உள்ளிட்ட பலரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்தது இஸ்ரேல்!

ஹைடெக்-கான பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்லப்பட்ட வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக, அந்த நிறுவனம் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. இதற்காக இஸ்ரேல் தனி மென்பொருளை உருவாக்‍கி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ள நிலையில் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் பத்திரிகை யாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்களை இஸ்ரேல் உளவு நிறுவனம் உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்திய குடிமக்களின் தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வீடியோ கால், வாய்ஸ்-கால், மெசேஜ், தகவல் பரிமாற்றம், புகைப்படம், வீடியோ காட்சிகள் பரிமாற்றம் உள்ளிட்ட இதன் வசதிகள் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி பேர் இதனை பயன்படுத்து கின்றனர். இதனிடையே நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அதாவது கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப் பட்டதாகவும், தெரிவித்துள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சில முக்கிய நபர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

பிரபல சமூக ஆர்வலர்கள் வாட்ஸ்ஆப் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாகவும், யார் யார் போன் எண்கள் கண்காணிக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட வில்லை எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சத்தீஸ்கரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெல்லாபாட்டியாவின் வழக்கறிஞர் நிகல்சிங் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள புகாரில் தனது மொபைல் போன் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக கூறியிருந்தார். மத்திய அரசும், வாட்ஸ்ஆப் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள், ‘நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுபற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம். இந்திய மக்களின் உரிமை சட்டபூர்வமாக பாதுகாக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். குடிமக்களின் உரிமைகள் சட்டப்படி பாதுகாப்பதை அரசு உறுதி செய்யும்’என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!