கொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..!

கொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..!
ங்குள்ள பலருக்கு நமக்கு கொரோனா வந்தால் என்ன செய்வது என்ற நினைப்பை விட வந்த வீட்ல இருந்து நேரடியா ஆம்புலன்ஸ் மூலம் ராஜா மாதிரி கூப்பிட்டு போவாங்க – அப்புறம் அங்க எட்டு கோர்ஸ் மீல்ஸ் – வூட்ல கூட மூணு வேலை தான் – தனிமைப்படுத்த பட்ட ஜாலி வார்ட் ஸ்பெஷல் அட்டென்சன் என நினைப்பவர்கள் எத்தனை பேர் அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரு நாள் சிகிசைக்காக தங்கிருக்கிங்கன்னு தெரில – அட்லீஸ்ட் எத்தனை பேர் ஒரு நாலாவது யாராவது அங்கு போய் வந்திருக்கிங்களா? எனக்கு தெரிந்த இந்த சமூகத்தின் பெரும் பகுதி இதை நீங்கள் செய்தது இல்லை என்பது எனக்கு தெரியும்.

சரி இப்பதான் தனியார் மருத்துவமனையில் தான் வந்திருச்சே அங்கே போய் பார்ப்பேன்னு சொல்றவங்களுக்கும் – எனக்கு இன்சூரன்ஸ் இறுக்கி என மார்தட்டி கொள்பவர்களுக்கு இந்த முன்னூக்கி கட்டுரை ஒரு தீர்வை தரும்.

கொரோனா நோய் அல்ல அது கடைசியில் உங்களை நிமோனியாவுக்கு இட்டு செல்லும் என தெரியும் தானே – அப்படி சிம்பிள் ரகமாய் தெரிந்தாலும் – ஒரு 5 வருஷம் முன்னாடி என்னோட மாமியாருக்கு திடிரென்று அதிக காய்ச்சல் இருமல் மூச்சு விட சிரமம் என வந்த பொது – உடனே நன் செய்த காரியம் – சாச்சுரேசன் எனப்படும் சிம்பிள் டெஸ்டை வீட்டிலே பால்சோடு செய்து பார்க்கையில் சாச்சுரேசன் 72 % விகிதம் தான் இருந்தது – உடனே அருகே இருந்த மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது – உடனே ஐ சி யு அட்மிட் வித் ஒன்னு லட்சம் அட்வான்ஸ் – 24 – 48 அபிசேர்வேசன் என 3 நாளில் எந்த முன்னேற்றம் இல்லை – வழக்கம் போல ஒருவர் தான் 10 நிமிடம் தினமும் பார்க்க முடியும்னு நிலை –

அதனால் வீட்ல பயந்து உடனே அப்போலோ ஷிப்ட்டிங் அங்கு அட்வான்ஸ் 2 லட்சம், நேராக சி சி யுவில் சேர்த்தனர் – பால்மனஜிஸ்ட் , நியூராலஜிஸ்ட், நெப்ராலஜிஸ்ட் என பல பேர் அங்கே பட்டியில் இடப்பட்டு மாமியார் கிடத்தப்பட்டார் – டெஸ்ட்கள் சகட்டுமணிக்கு – ரெண்டாவது நாளே இன்னும் 2 லக்ஸ் வேணும் எல்லா காசும் சரியாயிடிச்சுனு அடுத்த ரெண்டு லட்சம் கட்டின பிறகு எனக்கு அமெரிக்காவுக்கு போவது அவசியம் ஆனதால் நான் கிளம்பினேன் – அனால் தீர்க்கமாக வீட்டில் கூறினேன் தயவு செய்து வெண்டிலேட்டர் மட்டும் வேண்டாம் என்று – எவ்ளோ பிரஷர் போட்டாலும் வேண்டாம் என்றேன் – ஆனால் நான் அமெரிக்காவில் இறங்குவதற்கு முன் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தினமும் காலை 1 . 5 லட்சம் கட்ட சொல்லி சம்பிரதாயம் – வெண்டிலேட்டர் ஒரு உபயோகம் தரலைனு சொல்லி சுபேணா பொசிஷன்னு அது இதுனு பாத்து நாள் மொத்தம் 17 லட்சம் காலி –

அப்புறம் எனக்கு என்ன செய்யனு கேட்க நான் சொன்ன மாதிரி சொல்ல சொன்னேன் பணம் இல்லை அதனால நாங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கிறோமுன்னு சொல்லி ரெண்டாவது நாளே வெண்டி லேட்டர் ரிமோவ் பண்ணி சேடசன் அதிலிருந்து மீண்டு சுய நினைவுக்கு வர மூணு நாள் அப்புறம் ரெண்டே நாள்ல டிஸ் சார்ஜ் ஆனா மொத்தம் 19 லட்சம் காலி – கடைசில மைல்ட் நிமோனியா பறவை காய்ச்சல் கூட இல்லை. ஆனா அப்போலோவில் இருக்கிற அத்தனை டாக்டர் கன்சல்டேஷன் பீஸ் மட்டும் 8 லட்சம் ஆனா அதுல பல டாக்டருக்கும் இந்த நோயுக்கும் சம்பந்தமே இல்லை – சி சி யு சார்ஜ் மட்டும் 7 லட்சம் மருந்துகள் வெறும் 1 லட்சம் டெஸ்ட்கள் 3 லட்சம் பிளஸ்

அதனால தனியார் மருத்துவமனை பக்கம் போகவே முடியாது போன இதான் கதி, அரசாங்க ஆஸ்பத்திரி உங்களுக்கு உசசபட்ச சகிப்பு தன்மை இருப்பின் சர்வைவ் செய்யலாம் ஆனாலும் அதெல்லாம் விட சிம்பிள் உஷாரா இருங்க.. வீட்ல இருங்க இந்த நிலைமைக்கு உங்கள் குடும்பத்தை இட்டு செல்லவேய் வேணாம் – இந்த செலவில் இருந்து வெளியே வர பல வருடங்கள் ஆகலாம்…. அதனால் Prevention is Better than Cure….

Related Posts

error: Content is protected !!