சீக்கிய மத குரு ரவிதாசின் 645வது ஜெயந்தி மோடி பஜன்1- வீடியோ!

சீக்கிய மத குரு ரவிதாசின் 645வது ஜெயந்தி மோடி பஜன்1- வீடியோ!

சீக்கிய மத குரு ரவிதாசின் 645வது ஜெயந்தியை முன்னிட்டு இன்று டெல்லி கரோல்பாக்கில் உள்ள ரவிதாஸ் விஸ்ரம் தாம் மந்திரில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

ரவிதாஸ் ஒரு இந்திய ஆன்மீகவாதி, கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, ஆன்மீக குரு, அவர் பக்தி இயக்கத்தின் போது எழுதிய பக்தி பாடல்கள், வசனங்கள், ஆன்மீக போதனைகள் குறிப்பிடத்தக்கவை. இன்று ரவிதாஸின் 645வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ரவிதாஸ் சாதி அமைப்பை தீவிரமாக எதிர்த்தார், மத நல்லிணக்கம், ஆன்மீக சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை ஊக்குவித்தார். ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜனம் ஆஸ்தான் என்பது அவர் பிறந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பெயர். அவர் மீரா பாயின் ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்தார்.

பிரார்த்தனைக்குப் பின் நடைபெற்ற ‘சபத் கீர்த்தனை’யிலும் பங்கேற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “சாந்த் ரவிதாஸ் ஜியின் புனிதத் தலத்தைப் பற்றிய சில விஷயங்களை நான் நினைவுபடுத்துகிறேன். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், அங்கு தரிசனம் செய்து ‘லங்கர்’ செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த யாத்திரைத் தளத்தின் வளர்ச்சிப் பணிகளில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்று எம்.பி.யாக நான் முடிவு செய்திருந்தேன். ஒவ்வொரு அடியிலும், திட்டத்திலும் குரு ரவிதாஸின் உணர்வை அரசாங்கம் உள்வாங்கியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!