32°C
விளம்பரம்
Advertisement

போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ்! – மத்திய அரசு விசாரணை

admin சேலம் Published: October 2, 2018 2 நிமிட வாசிப்பு Updated: October 3, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஜோனஸ் சால்க் கண்டுபிடித்த போலியோதடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி
உடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டி இருக்க முடியும்.  ஆனால் சால்க் என்ன சொன்னார் தெரியுமா ? “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா ? சொல்லுங்கள் ?” -இப்படி சொல்லி பொது மக்களுக்கு பயன்படுத்தும் போலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் கலந்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Blood sample positive with polio virus

தற்போது இளம் பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக நடவடிக்கையில் இறங்கிய அரசு, போலியோ தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்தது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூட சுகாதார துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமான குழந்தைகள் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் பலியானதற்கும் இந்த மருந்து கலப்படத்திற்கும் சம்பந்தம் உள்ளதா என்ற ரீதியும் இந்த விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இந்த நிறுவனத்தால் வினியோகிக்கப்பட்ட போலியோ மருந்துகளை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்