விஜய் ஆண்டனியின் காளி படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது!

விஜய் ஆண்டனியின் காளி படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் “காளி”. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 13-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தை வெளியிட தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி வெளியிட்டதில் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ‘காளி’ படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், ‘காளி’ படத்தை தயாரிக்கும் அவரது மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர். நானும் ரூ.50 லட்சம் முன்தொகை கொடுத்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டேன்.தற்போது திரையுலக வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால், புதிய படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், என்னால் பாக்கித் தொகையை கொடுக்க முடியவில்லை. இதைடுத்து ‘காளி’ படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார். எனவே, ‘காளி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.”என்று அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘காளி’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். அதேநேரம், எதிர் மனுதாரர்கள் பாத்திமா, விஜய் ஆண்டனி ஆகியோர் ரூ.4.75 கோடியை 11-ந் தேதிக்குள் இந்த ஐகோர்ட்டில் டெபாசிட் செய்தால், திட்ட மிட்டப்படி வருகிற 13-ந் தேதி படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்’ என்று கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து விஜய் ஆண்டனி அப்பீல் செய்தார். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் சுப்பையா, ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று “காளி” படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

error: Content is protected !!