சுழற்பந்து வீச்சின் சக்கரவர்த்தி ஷேன் வார்னே காலமானார்!

சுழற்பந்து வீச்சின் சக்கரவர்த்தி ஷேன் வார்னே காலமானார்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்.

90’களில் உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னரிவர்.

இன்றுவரை லெக் ஸ்பின்னர்களுக்கு அவர்தான் ரோல் மாடல். சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் கிரிக்கெட்டின் எக்காலத்துக்குமான மிகச்சிறந்த வீரர்.

700 விக்கெட்கள் வீழ்த்தி உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னராக வலம் வந்த ஷேன் வார்னே ஏன் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை?! சர்ச்சைகள்தான். வார்னேவின் பர்சனல் வாழ்க்கை தொடங்கி கிரிக்கெட் கரியர் வரை சர்ச்சைகள் சூழ்ந்திருந்தது. பல பெண்களுடன் தொடர்பு, குடிப்பழக்கம், புக்கிகளுடன் நட்பு, போதை மருந்து உட்கொண்டது, களத்தில் பேட்ஸ்மேன்களுடன் மோதியது என ஷேன் வார்னேவின் பெயர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய செய்திகளிலேயே இடம்பிடித்துக்கொண்டிருந்தது. உலகம் வகுத்து வைத்திருக்கும் ஒழுக்கவிதிகளுக்குள் வார்னே சரியாக பொருந்தி வரராததால் அவரை ஆல் டைம் கிரேட்டாக ஒப்புக்கொள்வதில் இன்னும் சர்ச்சை நீடிக்கிறது. ஆனால், 90களில் கிரிக்கெட் பார்த்த ஒவ்வொரு ரசிகனுக்கும் ஷேன் வார்னே யார் என்பது தெரியும்.

‘’நான் செய்யாத தவறுகளே இல்லை. இப்போதும் தவறுகள் செய்கிறேன். ஆனால், என்னால் மக்களின் முகத்தில் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர முடிந்திருக்கிறது. மக்கள் என்னை அவர்களோடு பொறுத்திப் பார்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் நான் யாருக்காகவும் நடித்ததில்லை. நான் யார், என் குணம் என்ன, என் சந்தோஷங்கள் என்ன என்பதை யார் முன்பாகவும் நான் மறைத்ததில்லை. நான் ஒரு நல்ல என்டர்டெய்னராக இருந்திருக்கிறேன். பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து, பல நாடுகள் கடந்து, பணம் கொடுத்து என்னுடைய பந்துவீச்சை ரசிக்கப் பல ஆயிரம் ரசிகர்கள் பின் தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களை ஒருபோதும் நான் ஏமாற்றியதில்லை என்கிற திருப்தியே எனக்குப் போதும்’’ என்று தன்னுடைய கரியர் குறித்துப் பேசியிருக்கிறார் வார்னே! சர்ச்சைகளின் நாயகன் என ஊடகங்கள் தலைப்பிட்டாலும் ரசிகர்களுக்கு அவர் எப்போதும் கிங் ஆஃப் ஸ்பின்.

சுழற்பந்து வீச்சின் சக்கரவர்த்திக்கு அஞ்சலி

error: Content is protected !!