ஒரு புது வகை யூ எஸ் பி டாங்கில்! -இது எதுக்குன்னு தெரியுமா?
லேப்டாப்பை எந்த ஒரு பாஸ்வோர்ட்டை போட்டாலும் உடைக்கும் அளவுக்கு எளிமையாக இருக்கிறது வின்டோஸ் மற்றும் லைனக்ஸ் மென்பொருள். அதனாலே இப்ப பல லேப்டாப் ஒரு பயோமெட்ரிக் சென்சாரை லேப்டாப்பில் போட்டு கொள்ளை விலை விற்கின்றனர். இதன் மூலம் நீங்கள் அதிக விலை கொடுத்து புது மாடல் லேப் டாப்பை வாங்க வேன்டிய கட்டாயம். இந்த லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் நல்லாதானே இருக்கு இதை போய் ஏன் மாத்தனும்னு கேக்குறவகளுக்கு மட்டும் இந்த நியூஸ்……….!

Synaptics நிறுவனம் ஒரு புது வகை யூ எஸ் பி டாங்கிலை அறிமுகபடுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் பழைய லேப்டாப் மற்றூம் கணனியை பயோமெட்ரிக் லாகின் வகையாய் மாற்ற முடியும். இது மாதிரி டாங்கில்கள் முன்பே வந்திருந்தாலும் அது மைக்ரோசாஃப்ட் சர்டிஃபைட் அல்ல அது மட்டுமல்ல இந்த டாங்கில் உங்க வின்டோஸ் லைசென்ஸ் டீட்டெய்லை இந்த டாங்கிலில் பதிய வேண்டும். அப்படி பதிந்த பிறகு அந்த பயோமெட்ரிக் டாங்கிலை வேறு கணனியில் போட்டால் கூட வேலை செய்யாது. இனிமேல் ஒரு பிசிக்கு ஒரு டான்கில் நீங்கள் வெளியே போகும் போது ஜஸ்ட் டாங்கிலை பத்திரபடுத்தினாலே போதுமானது. மைக்ரோசாஃப்ட் இதை மென்பொருளோடு இலவசமாக கொடுக்கலாமா என நினைக்கிறது கூட.
ஆப்பிள் டச் போல பல பேங் பாஸ்வோர்ட்கள் கூட இந்த டச் மூலம் திறக்கமுடியும்.
USB Based Biometric Passwords for your Old Laptops and Desktops – Don’t Buy new one just for the biometric option…


