இந்தியாவின் யு.பி.ஐ. சேவை பிரான்ஸிலும் செல்லுபடியாகப் போகுது!

இந்தியாவின் யு.பி.ஐ. சேவை பிரான்ஸிலும் செல்லுபடியாகப் போகுது!

யு.பி.ஐ எனப்படும், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவை உலக அளவில் மிகப்பெரிய சேவையாக மாறியுள்ளது. சராசரியாக மாதம் 100 கோடி பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பெரும் வெற்றி பெற்ற யு.பி.ஐ சேவையை தேசிய பரிவர்த்தனை கழகம் உலக அளவில் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சிங்கப்பூர், பூட்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே இந்தியாவின் யு.பி.ஐ செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், சில நாடுகளுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸிலும் இந்த சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது. இதனை தேசிய பரிவர்த்தனை கழகத்தின் தலைவர் ரித்தேஷ் சுக்லா உறுதி செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து, இரு தரப்பிலும் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், மூன்று அல்லது நான்கு மாதங்களில் பணிகள் நிறைவடைந்து பரிவர்த்தனை சேவை செயல்பாட்டிற்கு வரும் என்று ரித்தேஷ் சுக்லா தெரிவித்துள்ளார். ஆக இந்தியாவின் டிஜிட்டல் சேவை தற்போது ஐரோப்பாவிலும் நுழைந்துள்ளது.

error: Content is protected !!