உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் யுனிவர்சல் பிக்சர்ஸ் வழங்கும் ஓப்பன் ஹைமர்!

உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  யுனிவர்சல் பிக்சர்ஸ் வழங்கும் ஓப்பன் ஹைமர்!

ஹாலிவுட்டின் மாஸ் மற்றும் கிளாஸ் இயக்குநர்களில் பெரும் எதிர்பார்ப்புக்குரியவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் `ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம், சர்வதேச அளவில் நாளை(ஜூலை 21) வெளியாக இருக்கிறது. கை பேர்ட் மற்றும் மார்டின் J. ஷெர்வினும் இணைந்து எழுதிய American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் நூலினைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ஹாலிவுட் திரைப்படம் ஓப்பன் ஹைமர்.

முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த அதே தலைமுறையில் உலகம், இரண்டாவது உலகப்போரினை கண்டது. ஆனால் அதற்குப் பின்னர் தலைமுறைகள் கடந்த பிறகும் இன்னொரு உலகப்போர் எழவில்லை. வல்லரசுகள் உட்பட உலக நாடுகள் மத்தியில் போர் குறித்தான அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நடந்தேறிய சம்பவமே இதற்கு காரணம். இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் துறைமுகத்தில் ஜப்பானின் போர் விமானங்கள் அக்கிரமத்தை அரங்கேற்றியதும், அமெரிக்கா வெகுண்டெழுந்து அணுகுண்டுகளை கையில் ஏந்தியது. ஹிரோஷிமா, நாகசாகி என ஜப்பான் நகரங்களில் அணுகுண்டுகளால் விளைந்த நாசம் இன்றைக்கும் அதன் வடுக்களோடு காத்திருக்கின்றன.

மேற்படி நாசகார அணுகுண்டுகளின் பிதாமகன் ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர். இவர் உருவாக்கிய அணுகுண்டுகளால், அமெரிக்காவின் காலில் ஜப்பான் விழுந்ததும், இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததும் நடந்தேறியது. இன்றைக்கும் உலக நாடுகள் அணு ஆயுதங்களை முன்வைத்து பரஸ்பரம் மிரட்டல் கண்ணாமூச்சி விளையாடினாலும், எவருக்கும் அதனை பயன்படுத்தும் துணிவு இல்லை. அதற்கான அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் விதைத்ததன் பின்னணியில் ஒளிந்திருப்பவர் ஓபன்ஹெய்மர். அப்படியான நபரை தனது கதையின் நாயகனாகக் கொண்டு புதிய திரைப்படத்தை செதுக்கியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.

இந்தப்படம், IMAX வடிவத்தை ஃபார்மெட் 65 எம்.எம். பெரிய வடிவ பட ஒளிப்பதிவுடன் இணைக்கப்பட்டு முதல்முறையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இப்படம் இந்த ஆண்டு, உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில், Cillian Murphy as J. Robert Oppenheimer, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் சில பகுதிகள், இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஓப்பன்ஹைமரும் எயின்ஸ்டீனும் இணைந்து பணியாற்றிய இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி – பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை உலகெங்கும் யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியீடுகிறது.

error: Content is protected !!