பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த உலகளாவிய தடை – யுனெஸ்கோ பரிந்துரை

பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த உலகளாவிய தடை – யுனெஸ்கோ பரிந்துரை

மெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் லாப நோக்கம் இல்லாத சாப்பியன் எனும் தனியார் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, தற்போது குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை கொடுப்பது நாகரீகமாகவும், கவுரவமாகவும் ஆகிவிட்டது. இதன் மூலம் தமது குழந்தைகள் டிஜிட்டல் அறிவை பெறுவார்கள் என பெற்றோர்கள் நம்புகின்றனர். ஆனால் அவர்களின் எதிர்காலத்தை நீங்கள் சூனியம் ஆக்கிக் கொள்கிறீர்கள் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தைக்கு எவ்வளவு முன்னதாக ஸ்மார்ட்போன் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இளம் வயதிலேயே மனநல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சிறுவயதிலேயே ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்த இளைஞர்கள் அதிக தற்கொலை எண்ணங்களுடனும், யதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பது போன்ற உணர்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து அவர்கள் ஒதுங்கி இருக்க நினைக்கிறார்கள். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடும் எண்ணங்கள் அவர்களுக்கு குறைந்திருந்தது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 6 வயது முதல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இளம்பெண்களில் 74 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதும், கடுமையான மனநல சவால்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில் யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது. பள்ளியில் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கல்வி செயல்திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல்திறனுக்கும் வழிவகுக்கிறது.தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பிரான்ஸ் நாடு தடை செய்தது. பின்னர் இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தடையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!