லவ் – விமர்சனம்!

லவ் – விமர்சனம்!

2020 ஆம் ஆண்டு காலித் ரஹ்மான் டைரக்‌ஷனில் நேரடி நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸாக வந்த மலையாள சினிமா ‘லவ்’வின் தமிழ் ரீமேக் தான் இது. மலையாளத்தில் இந்தப் படம் வெளியான போது அதன் தொழில்நுட்ப சிறப்புகளுக்காக கொண்டாடப்பட்டாலும், அதன் உள்ளடக்கம் அத்தனை நிறைவாக இல்லை என்ற விமர்சனங்களை சந்தித்த நிலையில் தமிழிலும் சொதப்பலாக தயாராகி வந்து இருக்கிறது.. லவ் என்ற பெயரில் திருமணத்தில் கவனிக்கப்படாத பிரச்சனைகளால் ஏற்படும் விளைவுகளை ஆராய முயற்சி செய்திருக்கிறது . ஆனால் படம் பார்ப்பவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது. அதே சமயம் கள்ளக்காதல் விஷயம் பற்றியெல்லாம் விவரித்திருக்கிறது.

அதாவது பரத் – வாணிபோஜன் இருவரும் ஹஸ்பெண்ட் & ஒய்ப் .. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆகி வாணிபோஜன் கொல்லப்படுகிறார். அவரது உடல் பாத்ரூமில் மறைத்து வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பரத் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அந்த வீட்டுக்குள் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக குழப்பத்தில் இருக்கும் நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார். அடுத்த சிறிது நேரத்தில் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருக்கும் பிக்பாஸ் டேனியும் வருகிறார். நடுவே வாணிபோஜனின் அப்பா ராதாரவியும் வந்து செல்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விவேக் பிரசன்னா, டேனி இருவருக்கும் உண்மை தெரிய வருகிறது.உடலை எப்படி அப்புறப்படுத்துவது என யோசிக்கிறார்கள். அப்போது மீண்டும் கதவின் பெல் அடிக்கப்படுகிறது. திறந்து பார்த்தால் அங்கு வாணி போஜன் நிற்கிறார்.
அதேசமயம் விவேக் பிரசன்னா, டேனி இருவரும் காணாமல் போகிறார்கள். அப்படி என்றால் கொலை செய்யப்பட்டது யார்? .. நண்பர்கள் இருவரும் காணாமல் போக என்ன காரணம்.. இவற்றுக்கெல்லாம் என்ன தான் முடிவு என்பதுதான் கதை(யாம்)

பரத் 50ஆவது படமென்றாலும் மனைவியை கொலை செய்த பயம் முகத்தில் இல்லாவிட்டாலும், உணர்வுகளிலாவது காட்டி இருக்க வேண்டும். மொக்கையாக நிற்கிறார்.. வாணி போஜனுக்கு நடிப்பை வெளிப்படுத்த சில காட்சிகள் தான், அதனை ஓரளவு பயன்படுத்தியிருக்கிறார். பரத்தின் நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, டேனியல் இருவரும் மிக வழக்கமாக ஒரு டெம்ப்ளேட் நடிப்பைக் கொடுத்து கடுப்பேற்றியிருக்கிறார்கள்.!

இசை அமைப்பாளர் ரோன்னி ரஃ பேல் இசையில் பாடல்கள் எதுவும் எடுபடவில்லை அத்துடன் பின்னணி இசையிலும் உரிய பங்களிப்பை வழங்க தவ்றி விட்டார். பி.ஜி.முத்தையா ஒரே வீட்டுக்குள்ளேயே முழுகதையையும் சுற்றி சுற்றி படமாக்கினாலும் பளிச்சென ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

திருமணத்திற்கு பின்பு தம்பதிகளுக்குள் காதல் இல்லாமல் போனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேச முயன்றாலும் அழுத்தமோ, தெளிவோ இல்லாததால் கவரவில்லை

மார்க் 2.5/5

Related Posts